வழித்துணையே.. காதலருடன் ஜாக்குலின் வெளியிட்ட சூப்பர் பிக்.. எப்போ கல்யாணம்னு கேட்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 ல் போட்டியாளராக பங்கேற்ற தொகுப்பாளினி ஜாக்குலின் தனது காதலருடன் கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார். விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக இருந்த ஜாக்குலின் அதன் பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார் ஜாக்குலின். ஆனால், தனக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதால் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ல் போட்டியாளராக பங்கேற்ற ஜாக்குலின் கடைசிவரை போராடி இறுதிப் போட்டியாளராக மாறினார்.

Bigg Boss fame Jacquline shared her lover photo once again

முத்துக்குமரன் பிக் பாஸ் எட்டாவது சீசன் டைட்டில் வின்னரான நிலையில், சௌந்தர்யா ரன்னர் அப் ஆனார். கடைசி வரை போராடிய ஜாக்குலினுக்கு தனி ரசிகர்களே கிடைத்தனர். தொகுப்பாளினி பிரியங்கா போல இவரும் ரன்னர் அல்லது வின்னர் ஆவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம் என்றாலும் முதல் நாளில் இருந்து தனித்துவமான விளையாட்டை அவர் விளையாடியதை பார்த்து பலரும் பாராட்டினர்.

ஜாக்குலினின் காதலர்: இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலரை பிக் பாஸ் பிரபலமான தொகுப்பாளினி ஜாக்குலின் அறிமுகப்படுத்தினார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ஹார்ட்டின் சிம்பிளை பதிவிட்டிருந்தார். இன்று போல் என்றுமே இன்புற்று வாழ மனம் நிறைந்த வாழ்த்துகிறேன் என முத்துக்குமரன் முதல் கமெண்ட் போட்டு இருந்தார்.

Bigg Boss fame Jacquline shared her lover photo once again

வழித்துணையே: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் நடிப்பில் வெளியான டிராகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் உருவான வழித்துணையே பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜீன்ஸ் படத்தில் வரும் அதிசயம் பாடலில் பல்வேறு நாடு்களில் உள்ள அதிசயங்களை ஷங்கர் காட்டியிருப்பார். அதுபோல இந்த பாடலில் ஐரோப்பா மொத்தத்தையும் அழகாக அஷ்வத் மாரிமுத்து காட்டியிருந்தார். இந்நிலையில் லேட்டஸ்ட்டாக தனது காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ஜாக்குலின் வழித் துணையே என கேப்ஷன் போட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையாவது எப்போது?: இயக்குனர் யுவராஜ் செல்வநம்பி என்பவரை தான் ஜாக்குலின் காதலித்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழித்துணையே என போஸ்ட் போட்டுள்ள நிலையில், வாழ்க்கை துணையாக எப்போது மாறப் போகிறார் என்றும் கல்யாண சாப்பாடு சீக்கிரம் போடுங்க அக்கா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

முத்துக்குமரன் கமெண்ட்: பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் ஜாக்குலினின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவர்கள் இருவரையும் கூட சில நெட்டிசன்கள் உள்ளே இருக்கும் போது கோர்த்து விட்டு கமெண்ட்டுகளை போட்டனர். இந்நிலையில், ஜாக்குலினின் இந்த பதிவுக்கு முத்துக்குமரன், "squid game 2 - எதாச்சும் குறியீடா இருக்குமோ.. ஏதோ சொல்ல வருகிறார் "யுவா" என கமெண்ட் போட்டுள்ளார். இருவரும் சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்கள் என்றும் அதன் காரணமாகத்தான் அடிக்கடி போஸ்ட்டுகள் வருகின்றன என்றும் கூறுகின்றனர்.

FAQs
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் சினிமாவில் எந்த பிரபல நடிகையுடன் இணைந்து நடித்துள்ளார்?

நயன்தாரா (கோலமாவு கோகிலா)

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X