விஜய்யோட தீவிர ஃபேன் மீனவப்பொண்ணு சுபிக்‌ஷாவுக்கு அடித்தது ஜாக்பாட்.. விஜய் குமார் ஜோடியாகிட்டாரா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீனவப்பொண்ணு சுபிக்‌ஷா போட்டியாளராக பங்கேற்ற நிலையில், அவருக்கு கடைசி வரை விஜய் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. தமிழ்நாட்டின் முதல் பெண் கடல் vlogger என பிரபலமான சுபிக்‌ஷா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 'அறிவு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷுக்கு கூட இன்னமும் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், சுபிக்‌ஷா பட போஸ்டரை சூர்யாவே வெளியிடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.

Bigg Boss Fame Meenava Ponnu Subiksha paired apposite with Uriyadi Vijayakumar s Arivu Movie
Photo Credit:

உறியடி படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான விஜய் குமார் நடிக்கும் 'அறிவு' படத்தில் தான் பிக் பாஸ் சுபிக்‌ஷா நடித்து வருகிறார். தனது சந்தோஷத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் ஷேர் செய்துள்ளார்.

ஓவியாவையே ஓரங்கட்டிட்டாங்க: சினிமாவில் களவாணி படத்தின் மூலம் பிரபலமான ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடித்தார். ஆனால், அதன் பின்னர் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படியே ஓவியாவை ஓரங்கட்டி விட்டனர். லாஸ்லியா, ஷிவானி நாராயணன் என வரிசையாக பிக் பாஸ் பிரபலங்கள் படங்களில் கமிட் ஆனாலும், ஒரு சில படங்களுக்கு மேல் அவர்களால் கோலிவுட்டில் தாக்கு பிடிக்க முடியவில்லை.

சுபிக்‌ஷாவுக்கு அடித்த ஜாக்பாட்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதில் பங்கேற்ற பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் இயல்பாகவே குவிவது வழக்கம் தான். ஆரி அர்ஜுனன் நடித்த பல படங்களும் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் அப்படியே கிடப்பில் உள்ளது. தாய் கிழவி படத்துடன் ரிலீஸ் ஆன ஃபோர்த் ஃப்ளோர் திரைப்படத்துக்கு தியேட்டரே கிடைக்கவில்லை என புலம்பினார். இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமான சுபிக்‌ஷாவுக்கு உறியடி விஜய் குமார் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அறிவு: விஜய் ரசிகையான மீனவப் பொண்ணு சுபிக்‌ஷா பிக் பாஸ் வீட்டில் அசத்திய நிலையில், தற்போது சத்யசிவா இயக்கத்தில் விஜய் குமார் நடிக்கும் 'அறிவு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மகளிர் தினத்தன்று தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது ரொம்பவே மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X