ரவீனாவுக்கு ரெட் கார்ட்.. சீரியலில் நடிக்கத் தடை.. பிரதீப்புக்கு செய்த துரோகம் சும்மா விடுமா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் ரவீனா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவர் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் சென்றடைந்தார். இவர் இப்போது பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். இதனால் அவரது எதிர்காலமே பெரிய சிக்கலில் உள்ளது எனக் கூறலாம்.

ரவீனாவைப் பொறுத்தவரையில் பிக் பாஸில் தான் தனது ரசிகர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்டார். இவர் சிறந்த நடனக் கலைஞர் என்பது பலருக்கும் தெரியும். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும், நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். சிறப்பாகவும் நடனம் ஆடி வருகிறார். பிரகாஷ் என்ற நடனக் கலைஞருடன் இணைந்து அந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது சக போட்டியாளர் மணி உடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

Bigg Boss Fame Raveena Daha Banned For Two Years in Television Serials

பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் அவர், சிந்து பைரவி என்ற சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவர் கமிட் ஆனபோதே இரண்டு கதாநாயகிகள் சீரியல் என்றால் நான் நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். உடனே தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, இரண்டு கதாநாயகிகள் கதையைத்தான் நாங்கள் தயாரிக்க உள்ளோம். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் முன்கூட்டியே சொல்லி விடுங்கள் நாங்கள் வேறு யாரையாவது நடிக்க வைத்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்கள்.

ரவீனா: சிந்து பைரவி நாடகம் இரண்டு கதாநாயகிகள் சப்ஜெக்ட் எனத் தெரிந்து கொண்ட பின்னர், அவர் சீரியல் ப்ரோமோ வுக்கு எல்லாம் நடித்துக் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 15 நாட்கள் ஷூட்டிங்கிற்கு சென்ற பின்னர், நாடகத்தில் நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சுமார் 100 எபிசோட்களுக்கு நடித்துக் கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். ஆனால் அவரோ, நான் காஷ்மீரில் இருக்கிறேன் வர முடியாது என மொத்தனப்போக்காக பதில் அளித்துள்ளார்.

Bigg Boss Fame Raveena Daha Banned For Two Years in Television Serials

தடை: இதனால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து ரவீனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ரவீனாவை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எதிலும் சின்னத்திரையில் நடிக்க, இரண்டு ஆண்டுகளுக்கு யாரும் ஒத்துழைப்பு செய்யக் கூடாது எனவும், இந்த உத்தரவு, தயாரிப்பாளர்களின் நலனை மனதில் வைத்து எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ரவீனா தற்போது பிரகாஷ் என்ற நடனக் கலைஞருடன் இணைந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருவதும் பிரச்னையாக மாறியுள்ளது.

Bigg Boss Fame Raveena Daha Banned For Two Years in Television Serials

பிரதீப் ஆண்டனி: அதாவது, இவரை அந்த நடன நிகழ்ச்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் மற்றும் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் ரவீனாவை ட்ரோல் செய்து வருகிறார்கள். அதாவது, பிக் பாஸில் பிரதீப் ஆண்டனி மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகள் சொன்ன, ரவீனாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் எனவும், கர்மா இஸ் பூமராங் எனவும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X