இது ரொம்ப கொடுமை.. விபத்தால் உயிரிழந்த சனம் ஷெட்டி தம்பி.. இரங்கல் தெரிவித்த சத்யராஜ் மகள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று மக்கள் தலைவியாக மாறிய சனம் ஷெட்டி சினிமா படங்களிலும், டிவி ரியாலிட்டி ஷோக்களிலும், பிக் பாஸ் விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார். நேற்று தனது தம்பி விபத்தில் உயிரிழந்துவிட்டார் என அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பல சினிமா பிரபலங்களையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2012ம் ஆண்டு தமிழில் வெளியான அம்புலி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சனம் ஷெட்டி. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும், சினிமாவில் தனக்கு சரியான கதாபாத்திரங்கள் வரவில்லை என்றும் சரியான வாய்ப்புகளை பெறுவதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறியிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. தொடர்ந்து சினிமாவில் சாதிக்க போராடிக் கொண்டிருக்கும் சனம் ஷெட்டிக்கு தற்போது தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டுள்ளது.
தம்பி மரணம்: 39 வயதாகும் நடிகை சனம் ஷெட்டி தனது தம்பி விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார். சிறு வயதிலிருந்தே எத்தனை கனவுகளுடன் வீட்டில் ஒரு ஆண் பிள்ளையை வளர்த்து இருப்பார்கள் என்றும் இளம் வயதில் இப்படி விபத்தில் பறிகொடுக்கவா சனம் ஷெட்டியின் பெற்றோர்கள் ராகுலை வளர்த்தார்கள் என்றும் ரசிகர்கள் சனம் ஷெட்டியின் தம்பியின் மரணத்தை அறிந்து கமெண்ட் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது ரொம்பவே கொடுமை: நடிகை சனம் ஷெட்டி தனக்கும் தனது பெற்றோர்களுக்கும் தாங்க முடியாத வலியை இந்த விபத்து கொடுத்து விட்டது. இது ரொம்பவே கொடுமை. என்னோட செல்லத் தம்பி ராகுலை இழந்து தவித்து வருகிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய தயவு செய்து அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என மன்றாடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சத்யராஜ் மகள் இரங்கல்: சனம் ஷெட்டியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து விட்டு சக பிக் பாஸ் நடிகையான சாக்ஷி அகர்வால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், விஜய் டிவி பிரபலங்கள், சனம் ஷெட்டியின் நண்பர்கள் என பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











