பாலியில் ஜாலி பண்ணும் பிக் பாஸ் விசித்ரா.. கண்ணாடி பாலத்தை பார்த்தாலே பயந்து வருதே!
சென்னை: 90களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த விசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். சம்மர் விடுமுறையை முன்னிட்டு பிரபலங்களும் நடிகைகளும் பல இடங்களுக்கு சென்று வரும் நிலையில், விசித்ரா தனது குடும்பத்துடன் பாலி தீவுக்கு சுற்றுலா செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை விசித்ரா. 1992ம் ஆண்டு வெளியான "சின்ன தாயே" திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான தலைவாசல் படத்தில் மடிப்பு ஹம்சா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்திலும் பணிப்பெண்ணாக நடித்திருப்பார் விசித்ரா. தெலுங்கிலும் பாலகிருஷ்ணா படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பிக் பாஸ் பிரபலம்: 2001ம் ஆண்டு வெளியான கிருஷ்ணா கிருஷ்ணா படத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சில சின்னத்திரை தொடர்களில் நடித்த இவர், 2023இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக் பாஸ் தமிழ்" சீசன் 7இல் போட்டியாளராகப் பங்கேற்று மீண்டும் கவனம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாகப் பேசினார், இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பிரபல டோலிவுட் நடிகரைத்தான் விசித்ரா குறிப்பிடுகிறார் என ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன.
மாலத்தீவில் ஜாலி டூர்: 2001ல் சினிமாவில் இருந்து விலகிய நிலையில், ஷாஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு வெளி மாநிலத்தில் குடியேறி, திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள விசித்ரா சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சம்மர் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் பாலி தீவில் சுற்றுலா செய்து வருகிறார்.

ஊஞ்சல் கட்டி ஆடுறாரு: பாலி தீவில் அந்தரத்தில் பறக்கும் படியான பெரிய ஊஞ்சலில் எந்தவொரு பயமும் இல்லாமல் விசித்ரா ஆடும் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பார்த்து வெயிட் தாங்காமல் கழண்டுட போகுது என்றும் வாழ்க்கையை உங்களை போலத்தான் ஜாலியாக கொண்டாடணும் என்றும் நாடு இருக்குற நிலைமைக்கு உங்களுக்கு ஃபாரீன் டூர் கேட்குதா என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கண்ணாடி பாலத்தில் செம போஸ்: மேலும், கீழே பார்த்தால் வயிறு கலக்கிவிடும் போல இருக்கும் கண்ணாடி பாலத்தின் மீது குடும்பத்தினருடன் நின்றும் தனியாக நின்றும் போஸ் கொடுத்துள்ளார். மஞ்சள் நிற உடையில் செம சூப்பராக போஸ் கொடுத்துள்ள விசித்ரா தனது இன்ஸ்டா கேப்ஷனில் என்னுடைய பக்கெட் லிஸ்டில் இன்னொன்று நிறைவேறி விட்டது என பதிவிட்டுள்ளார்.
ரச்சித்தா மகாலட்சுமி கமெண்ட்: ரச்சித்தா மகாலட்சுமி விசித்ராவின் இந்த பாலி டூர் புகைப்படங்களை பார்த்து ஸ்மைலி ஹார்ட்டின் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார். மேலும், விஜய் டிவி பிரபலங்கள் பலர் விசித்ராவுக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். ஊஞ்சலில் விசித்ரா ஆடும்போது தண்ணீரில் தெரியும் அவரது பிம்பம் வேறலெவல் என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











