BB8: கடைசி நேரத்தில் காதலருக்காக வாக்கு சேகரிக்கும் பிக்பாஸ் அர்ச்சனா.. வெளியிட்ட வீடியோவை பாருங்க!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் டைட்டிலை தட்டித் தூக்கியவர் அர்ச்சனா. இவரது செயல்பாடுகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இவருக்கு இந்த வெற்றி சாத்தியமானது. இந்நிலையில் இந்த வெற்றி இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டிமான்டி காலனி 2 படத்தில் இவர் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடந்துவரும் பிக்பாஸ் 8வது சீசனில் அர்ச்சனாவின் காதலர் அருண் போட்டியாளராக கலந்துக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போட்டியில் பங்கேற்று தன்னுடைய காதலை அர்ச்சனா சந்தித்தார்.

television bigg boss tamil 8 archana

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து டைட்டிலை தட்டித் தூக்கினார் அர்ச்சனா. தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவருக்கு இந்த வெற்றி அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் பெயிட் பிரமோஷன் மூலமாகவே தன்னுடைய வெற்றியை சாத்தியப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இருந்தபோதிலும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் நிகழ்ச்சியில் போட்டியிட்ட போதும், வெளியில் வந்து ஏராளமான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டபோதும் தன்னுடைய சிரிப்பை மறக்காமல் செயல்பட்டார் அர்ச்சனா.

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா: பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டிமான்டி காலனி 2 படத்தில் கேமியோ கேரக்டரில் இவர் நடித்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் காதலரும் சீரியல் நடிகருமான அருண் போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இவர் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலர் அருணை அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் சென்று சந்தித்தார்.

அர்ச்சனாவின் காதலர் அருண்: அருண் சிறப்பாக விளையாட அர்ச்சனா அட்வைஸ் செய்ததை பார்க்க முடிந்தது. தொடர்ந்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று அவரும் உறுதிக் கொடுத்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அருணுக்கு ஆதரவாகவும் அர்ச்சனா வெளியிலிருந்து பேசி வருகிறார். இதனிடையே தற்போது அருணுடன் தான் நெக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அருண் அர்ச்சனாவிற்கு முத்தம் கொடுப்பதையும் இருவரும் நீர்வீழ்ச்சியில் ஆட்டம் போடுவதையும் பார்க்க முடிகிறது.

அர்ச்சனா வெளியிட்ட வீடியோ: இந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா, அருணை அதிகமாக மிஸ் செய்வதாக உருக்கம் தெரிவித்துள்ளார். அருண் இல்லாமல் நாட்கள் மிகவும் கடினமாக இருப்பதாகவும் ஆனாலும் சமாளித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில தினங்கள் மிகவும் கனமான உணர்வை கொடுப்பதாகவும் தற்போது தன்னுடைய இதயம் அதை உணர்வதாகவும் கூறியுள்ள அர்ச்சனா, தான் அருணை மிஸ் செய்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X