பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல ரகசியங்கள் இருக்கு.. அது அப்படியேதான் இருக்கும்.. மாயா ஓபன்!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அடுத்த மாதத்தில் துவங்க உள்ளது. கடந்த ஏழு சீசன்களிலும் மாஸ் காட்டிய நடிகர் கமல்ஹாசன் தற்போது தன்னுடைய படங்களின் கமிட்மெண்டால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியை ஆங்கராக சேனல் களமிறக்கியுள்ளது.
அடுத்தடுத்து பிக்பாஸ் 8 சீசனின் பிரமோக்கள் வெளியாகி வரும் நிலையில் கடந்த சீசனில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தும் வெறுப்புக்கு உள்ளாகியும் பெரிய அளவில் கேங்கையும் வைத்திருந்த மாயா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் புதிய ஆங்கர் குறித்தும் பேசியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் விஜய் சேதுபதி மாஸ் காட்டி உள்ளதாகவும் மாயா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 8 சீசன் ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்தை சரியாக உணர்ந்து 7 சீசன்களாக மிகச் சிறப்பான நிகழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஏழு சீசன்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த சீசனில் பல மாற்றங்கள் இந்த நிகழ்ச்சியில் காணப்பட்டது. இரண்டு பிக் பாஸ் வீடுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் புகுத்தப்பட்டன. ஆயினும் கமல்ஹாசன் சிலருக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் பல விமர்சனங்களை சந்தித்தார். தொடர்ந்து அவரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரோல் செய்து பல மீம்ஸ்களை வெளியிட்டனர்.
பிக்பாஸ் புகழ் மாயா: இதனிடையே அடுத்தடுத்த படங்களின் கமிட்மெண்ட்கள் இருப்பதால் இந்த சீசனில் இருந்து தான் விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதன் பிரமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ஏறக்குறைய இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் அடுத்த மாதத்தில் நிகழ்ச்சி துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சீசனில் ரன்னர் அப்பாக வெற்றிபெற்ற மாயா தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த நீண்ட பதிவு ஒன்றினை செய்துள்ளார்.
மாயா எக்ஸ் தள பதிவு: அவரது இந்த பதிவில் அடுத்தடுத்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது வெளியாகியுள்ள பிரமோ சிறப்பாக உள்ளதாகவும் விஜய் சேதுபதி கொன்னுட்டார் என்றும் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த சில விஷயங்களை தான் பகிர்ந்துள்ளதாகவும் தற்போதுதான் அதை வெளிப்படுத்த தனக்கு தோன்றியுள்ளதாகவும் மாயா கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை என்டர்டெயின் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இதில் அவர்களை கவர்வதற்காக பல விஷயங்ளை புகுத்துவார்கள் என்றும் இதில் யாரையும் நல்லவர், கெட்டவர் என்று அடையாளப்படுத்தக்கூடாது என்றும் மாயா குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரகசியங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல ரகசியங்கள் பல உள்ளதாகவும் அது ரகசியமாகவே நீடிக்கும் என்றும் மாயா கூறியுள்ளார். இந்த சீசனில் ஆணாதிக்க மனபாவத்தையும் பெண் வெறுப்பையும் செயல்படுத்த வேண்டாம் என்றும் மாயா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பெண்களை பயமுறுத்த வேண்டாம் என்றும் மாயா கூறியுள்ள கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சீசனின் போட்டியாளர்களுக்கும் தன்னுடைய அறிவுரையை தெரிவித்துள்ளார். அதன்படி அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் பிக் பாஸ் வீட்டில் பல நண்பர்களை அவர்கள் பெற முடியும் என்றும் மாயா தெரிவித்துள்ளார். வெளியில் பேசுபவர்கள் குறித்து போட்டியாளர்கள் கவலை கொள்ளாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மாயா தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











