பிரியங்காவை தான் சொல்றாரா ஜாக்குலினும்.. வேலையே கிடைக்காமல் தவிச்சேன்னு இப்படி புலம்புறாரே!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே உடன் பல பெண் தொகுப்பாளினிகள் சண்டை போட்டு வருவதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து வெளியேறும் போது வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வந்த ஜாக்குலின் திடீரென தேன்மொழி சீரியல் பக்கம் சென்றது. அதன் பின்னர் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வராமல் வீட்டில் முடங்கியது என பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்.

priyanka deshpande jacqueline bigg boss tamil

கடந்த 2 ஆண்டுகளாக வாய்ப்பே கிடைக்காமல் தவித்தேன் என அவர் பிக் பாஸ் வீட்டில் பேசிய நிலையில், இதற்கும் பிரியங்கா தான் காரணமா? அவரைத்தான் மறைமுகமாக தாக்குகிறாரா ஜாக்குலின் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெண்களுக்குள் சண்டை: பிக் பாஸ் வீட்டிலேயே விஜய் டிவியின் மூலம் பிரபலமான பெண்களுக்குள் சண்டை வெடித்துக் கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. குக் வித் கோமாளி புகழ் மற்றும் ஹீரோயின் தர்ஷா குப்தாவையே பெண்கள் அணி நம்பாதது ஏன் என்கிற கேள்வியை புதிதாக வீட்டுக்குள் மீண்டும் நுழைந்துள்ள சாச்சனா எழுப்பியுள்ளார். ஆண்கள் ஒற்றுமையாக இருக்கும் அளவுக்கு பெண்கள் ஏன் ஒற்றுமையாக இருப்பதில்லை என பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக உலக பிரச்சனையையும் அந்த இளம்பெண் பேசியுள்ளார்.

விஜய் டிவியிலும் அதே பிரச்சனை: பிக் பாஸ் வீட்டில் மட்டுமின்றி விஜய் டிவியிலும் பெண் தொகுப்பாளினிகளுக்கு மத்தியில் தான் பெரும் பிரச்சனை வெடித்து வருகிறது. விஜே பாவனா விஜய் டிவியில் இருந்து விலகி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு செல்லவும் பிரியங்கா தான் காரணம் என்றும் டிடி நீலகண்டன் நிறைய நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் பண்ணாமல் விலகியது, விஜே ரம்யா விலகியது என அனைத்துக்கும் பிரியங்கா தான் காரணம் என பஞ்சாயத்துகள் வெடித்து வருகின்றன. மணிமேகலை வெளிப்படையாக பிரியங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டை வைத்தது தான் இதற்கு எல்லாம் அஸ்திவாரம் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்குலினும் பிரியங்காவை சொல்றாரா?: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த ஜாக்குலினுக்கு நெல்சன் இயக்கத்தில் வெளியான நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் தங்கையாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு ஓஹோ என போக வேண்டிய அவர் வாய்ப்புகளே கிடைக்காமல் தற்போது பிக் பாஸை நம்பி வந்துள்ளார். இளம்பெண் சாச்சனாவை நாமினேட் செய்யவில்லை என்றால் தான் வெளியேறிவிடுவேன் என்கிற பயத்தால் ஜாக்குலின் அவரை நாமினேட் செய்து வெளியே அனுப்பினார். இந்நிலையில், தனக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள் குறித்து ஜாக்குலின் பேசி வரும் நிலையில், அவர் மறைமுகமாக பிரியங்காவை தான் சொல்கிறார் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X