அக்கா - தம்பி அன்பு.. அசிங்கமா இல்லை.. தடவல் மன்னன் என ஜெஃப்ரியை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்.. மோசம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. நாளை அதற்கான ஷூட்டிங் ஆரம்பித்துவிடும். கிட்டத்தட்ட இந்த சீசன் டைட்டில் வின்னர் இவர்தான் என்கிற முடிவுக்கே ரசிகர்கள் வந்துவிட்ட நிலையில், கடைசியாக வைக்கப்பட்ட பணப்பெட்டி டாஸ்க்கின் மூலம் சில குழப்பங்கள் கிளம்பியுள்ளன.
பணப்பெட்டி டாஸ்க்கில் போட்டியிட்டு பணத்தை எடுத்தவர்கள் எல்லாம் வெளியே போறாங்களே என எடுக்காமல் பாதியிலேயே ஓடி வந்த செளந்தர்யாவை டார்கெட் செய்யும் விதமாக முத்துக்குமரன் பேசியதும் டிரெண்டாகி வருகிறது.

அதையெல்லாம் தாண்டி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த தடவல் மன்னன் ஜெஃப்ரியின் லீலைகளை தான் நெட்டிசன்கள் நோட் செய்து நொங்கெடுத்து வருகின்றனர். ஏற்கனவே போன சீசனில் இதே மாதிரியான பெயர் தான் அசல் கோலாருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அன்ஷிதா - தர்ஷா தான் டார்கெட்: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரொம்பவே கவர்ச்சி பொங்க பப்ளியாக இருக்கும் அன்ஷிதா மற்றும் தர்ஷா குப்தாவை மட்டுமே டார்கெட் செய்து தடவி வருகிறார் தடவல் மன்னன் ஜெஃப்ரி என நெட்டிசன்கள் மோசமான கமெண்ட்டுகளை போட்டு ஜெஃப்ரியின் லீலைகள் என அவர் செய்யும் சேட்டைகளை குறும்படங்களாக வெளியிட்டு வருகின்றனர்.
அன்ஷிதா வேண்டாம்னு சொல்லியும்: அன்ஷிதாவுடன் நெருக்கமாக ஜெஃப்ரி செய்வதை பார்த்து செம கடுப்பான அர்ணவ் தடவல் மன்னன் ஜெஃப்ரி என மீண்டும் வீட்டுக்குள் போன போதே அவரை போட்டு பொளந்துவிட்டார். அன்ஷிதா வேண்டாம் என்று சொன்னாலும் அவரை தூக்க ஜெஃப்ரி முயற்சி செய்த காட்சிகள் மற்றும் அவரது இடுப்பை கிள்ளி விளையாடியது எல்லாம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ரெட் கார்டு கொடுக்கணும்: விஜய் சேதுபதி ஜெஃப்ரிக்கு அப்பவே ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருக்கணும் என்றும் அக்கா - தம்பி அன்பு என சொல்லிக் கொண்டு அன்ஷிதா மற்றும் தர்ஷா குப்தாவை இடுப்பை கிள்ளி விளையாடுறது என்ன கெட்ட பழக்கம் ராஸ்கல் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். கிராண்ட் ஃபினாலேவுக்கு கூட அவரை அனுமதிக்கக் கூடாது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











