2024ம் ஆண்டோட முதல் உலகமகா உருட்டே இதுதான்.. நிக்சன் போட்ட போஸ்ட்.. வச்சு செய்யும் பிக் பாஸ் ஃபேன்ஸ்
சென்னை: பிக் பாஸ் சீசன் 7ல் பணப்பெட்டியே உள்ளே வந்து விட்டது. இந்த வாரம் விஜய் வர்மா தான் அதை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சொல்ல முடியாது, மாயாவுக்காக பூர்ணிமா கூட பெட்டியைத் தூக்க அதிக வாய்ப்புகள் இருக்கு என்றும் இந்த சீசனில் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் பாஸ் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய நிக்சன் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாகவும் சோஷியல் மீடியாவுக்கு சூப்பரான கன்டென்ட்டாகவும் தொக்காக மாட்டியிருக்கிறது.

வனிதா மகளை சந்தித்த நிக்சன்: பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நிக்சன் மற்றும் ரவீனா தாஹா இருவரும் டபுள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், வெளியேறிய நிக்சன் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. விக்ரம், ஜோவிகா மற்றும் நிக்சன் மூன்று பேரும் முழு நிலவை ரசித்தபடி எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நிக்சன் போட்ட பதிவு: இப்போதான் எல்லாத்தையும் பார்ததேன்.. எதிர்பார்த்தது எல்லாத்தையும் எதிர்ல பார்த்ததும் என்ன ஒரு ஃபீல்.. எவ்வளவு சப்போர்ட், எவ்வளவு லவ், இவ்வளவு பேருக்கு என்னை பிடித்திருக்கிறது என்பது உள்ளே இருக்கும் வரை தெரியவில்லை.. ஒருவேளை தெரிந்திருந்தால் இன்னும் எஃபோர்ட் போட்டுருப்பனோ? ச்சா.. அதெல்லாம் யோசிக்கவே இல்ல, ஐ அம் சாரி. உள்ள கப் ஜெயிக்கணும்னு போகல, என்னை நல்லவனா காட்டிக்க வேண்டும்னு போகல.. நான் யாருன்னு நான் தெரிஞ்சுக்க போனேன். இந்த வீடு தந்த எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் ஆண்டவர் கொடுத்த லெசன்ஸ், மூலமாக மெண்டலி நல்லா ட்யூன் ஆகியிருக்கேன். என்கிட்ட இருக்கிற நல்ல விஷயத்தை பாராட்டின எல்லாருக்கும் நன்றி! என்கிட்ட இந்த குறையை சுட்டிக் காட்ன, சுட்டிக்காட்டி இருக்குற எல்லோருக்கும் ரொம்ப நன்றி! நல்ல விஷயங்களை வளர்த்துக்கிறேன், கெட்ட விஷயங்களை மாத்திக்கிறேன். அவ்வளவு ஸ்டார்ஸ் நடுவுல யாருன்னே தெரியாது எனக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் இந்த வாய்ப்பு என்ற வாழ்க்கையை கொடுத்த எல்லாருக்கும் நன்றின்னு வார்த்தையில் சொன்னா பத்தாது வேலையில் காட்டுறேன்” என நிக்சன் பதிவிட்டுள்ளார்.
உலகமகா உருட்டு: 2024ம் ஆண்டின் முதல் உலகமகா உருட்டு இதுதான் பாஸ் என நிக்சன் போட்ட போஸ்ட்டை பங்கமாக பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இப்பவும் பண்ண தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்குறமாறு தெரியல என்றும் நிக்சன் நீங்க எந்தமாதிரி வேலையில இதை காட்டப் போறீஙக்ன்னு நாங்களும் பார்க்குறோம் என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











