நான் அடிச்ச மணி யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ பிக் பாஸுக்கு கேட்டிருச்சு: பார்வையாளர்கள்
சென்னை: பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் பிக் பாஸை கழுவிக் கழுவி ஊற்றிய நிலையில் அவர்கள் சொன்னதை செய்துள்ளார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொலைக்காட்சி சீரியல் போன்று ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. சீரியல்களில் கூட சுவாரஸ்யம் இருக்கும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோரை வைத்து ஒரு மொக்கை முக்கோண காதலை உருவாக்கி பார்வையாளர்களை டார்ச்சர் செய்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் அத்தனை பேர் இருந்தும் கவின், சாக்ஷி, லாஸ்லியாவையே அடிக்கடி காட்டி பார்வையாளர்களை கடுப்பேற்றுகிறார்கள்.

அபிராமி
பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கும் கொடுக்காமல் இருப்பதால் தான் சாக்ஷி எப்பொழுது பார்த்தாலும் யாருக்கு டார்ச்சர் கொடுக்கலாம் என்று யோசிக்கிறார். டாஸ்க் இல்லாமல் போனதால் அபிராமிக்கும் புறம் பேச, தேவையில்லாத வேலைகள் செய்ய நிறைய நேரம் உள்ளது. ஆகவே, டாஸ்க் கொடுத்து இந்த சிநேக்சி, அபிராமியை பெண்டு எடுக்கவும் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பார்வையாளர்கள்
டாஸ்க் கொடுக்காமல் இருந்ததற்காக பிக் பாஸை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இந்நிலையில் இன்று டாஸ்க் கொடுத்து ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பரவாயில்லையே, நாம் திட்டியது வீண் போகவில்லை என்கிறார்கள் அவர்கள்.

சேரன்
டாஸ்கின்போது இயக்குநர் சேரனுக்கு அடிபட்டு படுத்துக் கிடப்பது போன்று ப்ரொமோ வீடியோவில் காட்டியுள்ளனர். இதை எல்லாம் பார்த்து சேரனுக்கு அடிபட்டுவிட்டது என்று நாங்கள் நம்ப மாட்டோம். ப்ரொமோ வீடியோவில் ஒன்றை காட்டிவிட்டு நிகழ்ச்சியில் வேறு ஒன்றை காட்டி ஏமாற்றுவது பிக் பாஸுக்கு கை வந்த கலை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பிரச்சனை
டாஸ்க் கொடுத்தது சரி. ஆனால் அவன் என்னை அடிச்சிட்டான், கிள்ளிட்டான், தள்ளிவிட்டுட்டான் என்று சிறுபிள்ளைத்தனமாக யாரும் சண்டை போடாமல் இருந்தால் சரி. இப்பொழுது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. இப்படி அடிக்கடி டாஸ்க் கொடுத்தால் எங்களுக்கும் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் ஏற்படும் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











