twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலாஜி கேட்டதை கொடுத்த பிக் பாஸ்: அப்போ ஐஸ்வர்யா கேட்டதையும் கொடுப்பாரா?

    By Siva
    |

    சென்னை: தாடி பாலாஜி பிக் பாஸிடம் கேட்டது கிடைத்துவிட்டது.

    பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள இருவர் இந்த வாரம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார் கமல். முதல் ஆளாக தாடி பாலாஜியை அனுப்பிவிட்டார்கள்.

    தாடி பாலாஜியோ தான் கேட்டது கிடைத்த மகிழ்ச்சியில் கிளம்பிச் சென்றுள்ளார்.

    நன்றி

    நன்றி

    9 ஆண்டுகளாக மாறாத பாலாஜியை 90 நாட்களில் மாற்றிக் கொடுத்த பிக் பாஸுக்கு தனது நன்றியை தெரிவித்தார் நித்யா. இதை கேட்ட கமல் ஹாஸனோ சூழல் மாறியதால் பாலாஜி மாறிவிட்டதாக கூறினார். அடுத்த 100 நாட்களுக்கு நான் உங்களை தான் கவனித்துக் கொண்டிருப்பேன். 60 கேமராக்கள் இல்லை ஆனாலும் நான் கவனிப்பேன் என்று பாலாஜியை எச்சரித்தார் கமல்.

    டாஸ்மாக்

    டாஸ்மாக்

    டாஸ்மாக் இருக்கும் இந்த ஊரில் நீங்கள் திருந்தி வாழ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து காட்டினால் அது பெரும் முன்னுதாரணமாக இருக்கும் என்று பாலாஜியை பார்த்து கூறினார் கமல். பாலாஜிக்கு அறிவுரை வழங்கியபோதே தனது அரசியல் பேச்சையும் கொண்டு வந்துவிட்டார். ஆனால் அவர் சொல்வதிலும் உண்மை இருகக்கத் தான் செய்கிறது. டாஸ்மாக் கடைகள் அதிகம் உள்ள இடத்தில் குடிப்பழக்கம் உள்ள ஒருவர் திருந்துவது அவரின் மன பலத்தையே காட்டும்.

    பாலாஜி

    பாலாஜி

    இத்தனை நாட்களாக நான் பிக் பாஸ் வீட்டில் இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நானே ஒரு கோபக்காரன். ஆனால் உள்ளே என்னை மிஞ்சிய கோபக்காரர்களை பார்த்து நான் ஆஃப் ஆகிவிட்டேன். மற்றவர்கள் கோபப்பட்டதை பார்த்து நாம் கோபப்பட்டு மற்றவர்களை இப்படித் தானே காயப்படுத்தியிருப்போம் என்று புரிந்தது என்றார் பாலாஜி. மகளுக்காக குடிப்பழக்கத்தை விடுவதாகவும் வாக்குறுதி அளித்தார் அவர்.

    போர்ஷிகா

    போர்ஷிகா

    மது அருந்தாமல், கெட்ட வார்த்தை பேசாமல், சந்தேகப்படாமல் இருந்தால் மகள் போர்ஷிகாவுக்காக பாலாஜியை ஏற்றுக் கொள்வதாக நித்யா தெரிவித்தார். பிரிந்து சென்ற மனைவி நித்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் ஆசையில் தான் பிக் பாஸ் வீட்டிற்கே செல்கிறேன் என்று பாலாஜி முன்பு கூறியிருந்தார். ஆக விஸ்வாசி பாலாஜி எதை விரும்பினாரோ அவருக்கு அதை கொடுத்துவிட்டார் பிக் பாஸ். அப்படி என்றால் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று ஐஸ்வர்யா கூறி வருகிறாரே. அதை அவருக்கே கொடுத்துவிடுவாரோ?

    English summary
    Actor Balaji has got what he wanted after participating in Bigg Boss 2 Tamil show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X