ப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி
Recommended Video

சென்னை: மகத்தால் பிக் பாஸ் 2 ப்ரொமோ வீடியோவில் பீப் போட வேண்டியதாகிவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் காயத்ரி ரகுராம் ஹேர் என்ற வார்த்தையை கூறியதை கேட்டு பார்வையாளர்கள் கொந்தளித்தனர். ஆனால் பிக் பாஸ் 2 வீட்டில் போட்டியாளர்கள் சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்.
பிக் பாஸை பீப் பாஸாக்கிட்டீங்களே என்று கமல் ஹாஸனே பாலாஜியை பார்த்து கேட்கும் அளவுக்கு அவர் கெட்ட வார்த்தை பேசினார்.
வைஷ்ணவி
வைஷ்ணவிக்கும், மகத்திற்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தமாக உள்ளது. இந்நிலையில் இன்றயை ப்ரொமோ வீடியோவில் வைஷ்ணவி பற்றி பேசும் போது மகத் கெட்ட வார்த்தை பேச அதை பீப் போட்டு நமக்கு கேட்காதபடி செய்துள்ளனர்.
டாஸ்க்
இந்த வாரம் தலைவர் பதவிக்கு செம கஷ்டமான டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். சான்சே இல்லை....
நோஸ்கட்
இந்த வாரம் யாரை நாமினேட் செய்கிறீர்கள் என்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது சென்றாயன் கூறிய பதிலை ஏற்க மறுத்துவிட்டார் பிக் பாஸ்.
பதில்
பிக் பாஸ் ல என ரூல் வேணும்னாலும் வச்சிக்கோங்க , ஆனா எங்களை ஏன் vote போட சொன்னிங்க, நாங்க vote போடாத ஒரு பெண்ணை எப்படி நீங்க save பண்ணிங்க,. எங்களுக்கு விளக்கம் வேண்டும், அது வரை நீங்க #fakevijaytv தான் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications