போட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் கூறியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கேட்டுவிட்டது போன்று.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் நாள் சுவாரஸ்யமே இல்லாமல் சப்பையாக இருந்தது என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.
போட்டியாளர்கள் தேர்வும் சரியில்லை என்று சிலர் அலுத்துக் கொண்டுள்ளனர்.

கேட்டுவிட்டது
பார்வையாளர்களின் எரிச்சலான பேச்சுகள் பிக் பாஸுக்கு கேட்டுவிட்டது போன்று. அதனால் தான் சுவாரஸ்யத்தை ஏற்ற போட்டியாளர்களிடையே சண்டை மூட்டிவிடும் வேலையில் இறங்கிவிட்டார்.

வீடியோ
இந்த வீட்டில் உள்ளவர்களில் உங்களை யார் அதிகமாக எரிச்சலூட்டுவார்கள் என்று ஜனனி கேட்க மும்தாஜோ டேனியலின் வாய்ஸ் தான் கடுப்பாக உள்ளது என்று கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. குரல் என்பது இறைவன் கொடுப்பது மும்தாஜ்.

வெறுப்பு
நீங்கள் அதிகமாக வெறுக்கும் நபர் யார் என்று நித்யா கேட்க அவரின் கணவர் தாடி பாலாஜி எழுந்து வருவது போன்று ப்ரொமோ வீடியோவில் காட்டியுள்ளனர்.

சமாதானம்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் மும்தாஜ் அடிக்கடி கடுப்பாகிறார். தாடி பாலாஜியும், நித்யாவும் சண்டை போடுவார்கள் என்று யார் எதிர்பார்த்தார்களோ அவர்களுக்கு ஏமாற்றமே. இருவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடிதம்
கடிதம் எழுதும்போது இப்படிக்கு என்று எழுதுவது போன்று யாரிடம் பேசினாலும் எனக்கும், என் கணவர் பாலாஜிக்கும் இடையே பிரச்சனை என்பதை மறக்காமல் சொல்லிவிடுகிறார் நித்யா.


Click it and Unblock the Notifications