Bigg Boss Winner: சரியான போட்டி.. கடைசியில் டைட்டிலைத் தட்டித்தூக்கிய கௌரவ்.. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
மும்பை 15 வாரங்களாக கடுமையான போட்டிகள் மற்றும் சவால்கள் நிறைந்து காணப்பட்ட பிக்பாஸ் இந்தி சீசன் 19 ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சீசன் டைட்டிலை வளர்ந்து வரும் இளம் நடிகர் கௌரவ் கண்ணா வென்றுள்ளார். பெரும் போராட்டத்திற்கு பிறகே கோப்பையை தனதாக்கி உள்ளார் கௌரவ் கண்ணா. இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் என்றாலே எப்போதும் ஒரு பரபரப்பு இருக்கும். அதற்கு இந்த சீசனும் விதிவிலக்கு அல்ல. ரசிகர்களுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு எண்டர்டெயின் செய்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது இந்த சீசனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான போட்டியாளர்கள், வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் என போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
பிக்பாஸ் என்றாலே சண்டை, சர்ச்சை, குரூப்பிஸம், நகைச்சுவை, எமோஷன்ஸ் என மொத்தமும் கலந்ததாக இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் இவை அனைத்தும் காணப்பட்டது. இப்படி இருக்கும்போது இந்த சீசனின் டைட்டிலை யார் வெல்வார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஒரு கட்டத்தில் அதிகரித்துவிட்டது. காரணம் இறுதி வாரத்தை நெருங்க நெருங்க போட்டியாளர்களின் ஆட்டம் மிகவும் சிறப்பானதாக இருந்தது.

டைட்டில் வின்னர்: ஆனால் கடைசியில், வளர்ந்து வரும் இளம் நடிகர் கௌரவ் கண்ணா டைட்டிலைத் தட்டித் தூக்கி உள்ளார். அவருக்கு இந்த டைட்டிலுடன் ரூபாய் 50 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளார். அதேபோல் ஏற்கனவே டாஸ்க் ஒன்றில் வெற்றி பெற்று கார் ஒன்றையும் பரிசாக வென்றுள்ளார், கௌரவ் கண்ணா. இவர் வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இறுதிச் சுற்று வருவதற்கும் டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டை வென்று இறுதிப் போட்டிகு தகுதி பெற்றார்.


Click it and Unblock the Notifications











