பொறுக்கி பய.. காரி துப்பிடுவேன்.. காருக்குள் வரம்பு மீறி பேசிய கம்ருதீன்.. மயங்கி விழுந்த சாண்ட்ரா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 'டிக்கெட் டூ ஃபினாலே' டாஸ்க் மூலம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் முதல் இறுதிப் போட்டியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், போட்டியாளர்களான சபேரி மற்றும் கமருதீன் இருவரும் இந்த டாஸ்கில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, முன்னணி வகித்து வருகின்றனர். புள்ளிகள் பட்டியலில் இந்த இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

'டிக்கெட் டு ஃபினாலே' என்பது பல்வேறு சுற்றுகளைக் கொண்டது. இதில் போட்டியாளர்களின் உடல் வலிமை, மன உறுதி, மற்றும் சகிப்புத்தன்மை போன்ற திறன்கள் சோதிக்கப்படும். அதிக புள்ளிகள் பெறும் போட்டியாளருக்கு, நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு 'கோல்டன் டிக்கெட்' கிடைக்கும்.இந்த கோல்டன் டிக்கெட்டை யார் வெல்வார்கள் என சமூக வலைத்தளங்களில் கணிப்புகள் அதிகரித்து வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 9: டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கம்ருதீன் மூர்க்க தனமாக விளையாடி வருகிறார். பந்து டாஸ்கின் போது, கம்ருதீனுக்கும் பார்வதிக்கும் இடையே அடிதடி ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்று விட்டது. பின் ஹவுஸ்மெட்டுகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து, நேற்று பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு சாண்ட்ராவை டார்க்கெட் செய்தனர். இதனால், இருவருக்கும் இடையே பெரிய சண்டை வெடித்தது. இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Bigg Boss Kamurudin Sandra
Photo Credit:

மயங்கி விழுந்த சாண்ட்ரா: கடுமையான கார் டாஸ்க்கில், ஒருவர் மீது ஒருவர் இடமே இல்லாமல் மொத்த பேரும் அந்த காருக்குள் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது, கம்ருதீனுக்கும் சான்டாவிற்கும் இடையே சண்டை நடக்கிறது. அதில், சாண்ட்ரா உன்னுடைய கேரக்டர் என்ன என்பது ஊருக்கே தெரியும், நான் சொல்ல தேவையில்லை என சொல்கிறார். அப்போது கம்ருதீன் நீயே பொறுக்கி என சொல்ல, உன்னை மாதிரி நான் இந்த வீட்டுக்குள் பொறுக்கித்தனம் செய்யவில்லை என சாண்ட்ரா பதிலடி கொடுக்கிறாள். இதனால், கோவத்திற்கு சென்ற கம்ருதீன், நான் பொறுக்கி தனம் செய்ததை நீ பார்த்தியா? உன் மூஞ்சியில் காரி துப்பி விடுவேன் என்று சொல்ல சாண்ட்ரா தைரியம் இருந்தால் துப்புடா என சொல்கிறார் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதால் சாண்ட்ராவிற்கு பேனிக் அட்டாக் வந்து மயங்கி விழுந்திருக்கிறார். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றிருக்கிறார்கள். சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்துவரப் பட்டிருக்கிறார்.

More from Filmibeat

Read more about: bigg boss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X