ஆரவின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காத பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஆரவின் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்படவலில்லை.
பிக் பாஸ் 2 வீட்டில் தாடி பாலாஜி, மும்தாஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் தான் காயத்ரி, ஆர்த்தி, சுஜா, சினேகன், வையாபுரி, ஆரவ் ஆகிய முன்னாள் போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்தனர்.
கடைசி ஆளாக வந்த ஆரவ் முதல் ஆளாக கிளம்பிச் சென்றுவிட்டார்.

ரசிகைகள்
பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவை பார்த்து திட்டிய பெண் பார்வையாளர்கள் கூட இந்த சீசனில் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சீசன் போட்டியாளர்கள் செய்வதை எல்லாம் பார்த்தால் ஆரவ் எல்லாம் ஒன்றுமே இல்லை. ஆரவை பார்த்து பெண் பார்வையாளர்கள் இந்த அளவுக்கு சந்தோஷப்படுவார்கள் என்று அவர்களே நினைக்கவில்லை.

யாஷிகா
பிக் பாஸ் 2 வீட்டிற்குள் வந்ததும் ஆரவுக்கு யாஷிகா மேக்கப் இல்லாமல் இருப்பது தான் பெரிய குறையாக தெரிந்தது. பாவம் பிக் பாஸ், யாஷிகாவுக்கு மேக்கப் போட அனுமதி கொடுங்க என்று வந்ததும் வராததுமாக கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் கிளம்பிச் சென்ற பிறகும் அவரின் கோரிக்கையை பிக் பாஸ் நிறைவேற்றவில்லை.

தாடி பாலாஜி
ஆரவ் இவ்வளவு தூரம் வந்துவிட்டு மருத்துவ முத்தம் கொடுக்காமல் போனால் எப்படி? தாடி பாலாஜிக்கு பெண் வேடமிட்டு அவருக்கு ஆரவை மருத்துவ முத்தம் கொடுக்க வைத்துவிட்டார்கள். இந்நேரம் பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருந்திருந்தால் நன்றாக இருக்கும். ஆரவை மருத்துவ முத்தம் கொடுக்கத் தான் பிக் பாஸ் அழைத்து வந்தார் போன்று.

வருத்தம்
நேற்று கமல் ஹாஸன் வந்தபோது பிக் பாஸ் வீட்டில் ஆரவ் இல்லை. அனைவரையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அதற்குள் ஒருவர் கிளம்பிவிட்டாரா? என்று கமல் ஹாஸன் ஃபீல் பண்ணினார். ஆக, பிக் பாஸ் பார்வையாளர்களை மட்டும் அல்ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸனையும் ஏமாற்றம் அடைய செய்கிறார்.

கடினம்
ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்லும் டிக்கெட் பெறுவதற்கான டாஸ்க் ரொம்பவே கடினம் என்று சொல்ல வேண்டும். யாஷிகாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு அந்த டாஸ்கே காரணம். தண்ணீர் நிரம்பிய கின்னத்தை மணிக்கணக்கில் கையில் வைத்திருந்தால் இப்படித் தானே ஆகும். ஃபினாலே டாஸ்கை இந்த அளவுக்கு கஷ்டமாக கொடுத்திருக்க வேண்டியது இல்லை. ஜனனி கஷ்டப்பட்டு ஃபினாலே வாரத்திற்கு சென்றுள்ளார். ஐஸ்வர்யா எந்த கஷ்டமும் இல்லாமல் செல்வார். நல்லா இருக்கு பிக் பாஸ், உங்க நியாயம்.


Click it and Unblock the Notifications











