இடுப்பில் கையை போட்ட சினேகன்: நைசாக நழுவிய ஐஸ்வர்யா, ஆரம்பிச்சுட்டாருல
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யா சினேகனின் பிடியில் இருந்து லாவகமாக தப்பியுள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது மிகவும் பிரபலம். இந்நிலையில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். வந்த வேகத்தில் யாரையாவது கட்டிப்பிடிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.
மும்தாஜ் மீது கையை போட்டார் ஆனால் கட்டிப்பிடிக்கவில்லை. பயமோ, என்னவோ?

சினேகன்
சினேகன் சமையல் அறையில் வேலை செய்வதை பார்த்த ஐஸ்வர்யா வழிந்து கொண்டே நீங்க சிறந்த சமையல் கலைஞர் உங்கள் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர் என்றார். இதை கேட்ட சினேகனுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. அந்த கழுதையை தான் பல வருஷமா தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சினேகன் ஆர்த்தியிடம் கூறினார்.

இந்த சீசன்
சினேகன் சொன்னதை கேட்ட ஆர்த்தி இந்த சீசனில் பெண் கிடைத்துவிடும் போன்று. எனக்கு அப்படித் தான் தோன்றுகிறது. நீங்கள் மறுபடியும் வந்ததன் டாஸ்கே அது தான் என்று தோன்றுகிறது என்றார். இதை கேட்டு சினேகனுக்கு ஒரே சிரிப்பு. ஆர்த்தி கூறியதை கேட்ட ஐஸ்வர்யா, ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையா என்று ஆர்வமாக கேட்டார். அதற்கு சினேகன் ஒரு பார்வை பார்த்தாரே, ஷப்ப்பா. வாய்ப்பு இருக்கு, வாய்ப்பு இருக்கு என்று ஆர்த்தி ஓட்ட ஆரம்பித்துவிட்டார். ஐஸ்வர்யா வேண்டாம் சினேகன், அந்த புள்ள கோபப்பட்டு பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?

பெண்கள்
சினேகன் சமையல் செய்யும்போது அந்த ஏரியாவில் பெண்கள் மட்டும் தான் இருந்தார்கள். அவரும் வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தார். வழக்கமாக ஒரு பார்வை பார்ப்பாரே அதை வேறு பார்த்தார். இந்த காயத்ரி சும்மா இல்லாமல் ஐஸ்வர்யாவிடம் குச் குச் ஹோத்தா ஹை கஜோல் மாதிரி சினேகனிடம் பேசுமாறு தூண்டிவிட்டார்.
கவிதை
கஜோல் மாதிரி நடிக்கச் சொன்னால் ஐஸ்வர்யா லூசு மாதிரி நடித்தார். கவிதை தான் வேண்டும் என்று ஐஸ்வர்யா கொஞ்ச, சினேகனுக்கு ஒரே வெட்கம். இந்த கொடுமையை எல்லாம் பார்க்கணும்னு நமக்கு எழுதியிருக்கு. பேச்சு வாக்கில் சினேகன் ஐஸ்வர்யாவின் இடுப்பில் கையை போட அவர் நைசாக நழுவிவிட்டார். சூதானமாக இருங்க சினேகன், ஐஸ்வர்யாவை கோர்த்துவிடப் பார்க்கிறார்கள்.

சீசன் 2
இது இரண்டாவது சீசன் என்பதால் சினேகன் எங்களுக்கு தான் என்றார் ஐஸ்வர்யா, காயத்ரியோ எங்களுக்குத் தான் என்றார். அந்த ஆளு என்ன சாக்லேட்டா, கரடி பொம்மையா எனக்கு உனக்கு என்று போட்டி போடுகிறீர்கள். இதில் ஐஸ்வர்யா சினேகன் தோளில் கையை போட்டு ஜாலியாக ஒரு ரவுண்டு வேறு அடித்தார். இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து தான் சினேகனை அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ். வாழ்றார் சினேகன்.


Click it and Unblock the Notifications











