இனிமேல் பொன்னம்பலம் வெளியே இருந்தா என்ன, பிக் பாஸ் வீட்டில் இருந்தா என்ன?

By Siva

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள இளசுகள் எதிர்பார்த்தபோது போகாத பொன்னம்பலம் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் வாராவாரம் நாமினேட் செய்யப்பட்டவர் பொன்னம்பலம். வாராவாரம் நாமினேட் செய்யப்படுவதும், காப்பாற்றப்படுவதுமாக இருந்தார் சித்தப்பு பொன்னம்பலம்.

இந்நிலையில் ஒரு வழியாக நேற்று வெளியேற்றப்பட்டார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

யாஷிகா, ஐஸ்வர்யா அரைகுறை ஆடை அணிவது குறித்து விமர்சித்து அவர்களின் கோபத்திற்கு ஆளானார் பொன்னம்பலம். யாஷிகா-மகத், ஐஸ்வர்யா- ஷாரிக் ஆகியோருக்கு புத்திமதி சொல்லி கெட்டப் பெயர் வாங்கினார். இந்த ஆளு போய் தொலைய மாட்டானா என்று அந்த 4 பேரும் ஆவலுடன் எதிர்பார்த்தபோது எல்லாம் அவரை பார்வையாளர்கள் காப்பாற்றிவிட்டனர்.

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

இரவு நேரத்தில் ஆண்களின் படுக்கையறைக்கு வந்து ஷாரிக்குடன் கடலை போட்டார் ஐஸ்வர்யா. அதை கண்டித்த பொன்னம்பலத்தை பெரியவர் என்று கூட பார்க்காமல் ஐஸ்வர்யா மல்லுக்குப் பாய்ந்தார். இதுவும் நன்றாக இருக்கே என்று ஐஸ்வர்யா, பொன்னம்பலத்தை மோதவிட்டு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பொன்னம்பலம் கூறிய அறிவுரை ஷாரிக்கிற்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.

மகத்

மகத்

தற்போது பிக் பாஸ் வீட்டில் ஷாரிக் இல்லை, மகத்-யாஷிகா இடையே சரியான பேச்சுவார்த்தை இல்லை. இப்படி எந்த கசமுசாவும் நடக்காத நேரத்தில் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வெளியே செல்ல மாட்டாரா, நாம் நிம்மதியாக இருக்க மாட்டோமா என்று யாஷிகா, மகத், ஐஸ்வர்யா, ஷாரிக் நினைத்தபோது அது நடக்கவே இல்லை. இனி அவர் இருந்தா என்ன, இல்லாவிட்டால் என்ன என்ற நிலைமைக்கு அவர்கள் வந்துள்ள நேரத்தில் பொன்னம்பலம் அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிக் பாஸ் பார்வையாளர்களை மட்டும் அல்ல போட்டியாளர்களையும் ஏமாற்றம் அடையச் செய்து வேடிக்கை பார்க்கிறார்.

பிராச்சி

பிராச்சி

மகத்தை காதலிப்பதாக கூறிய யாஷிகாவை நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள். பார்வையாளர்களிடையே சிம்பதி கிரியேட் பண்ண இப்படி நடிக்கிறார் யாஷிகா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மகத் மீது காதல் வந்ததாக கூறிய யாஷிகாவுக்கு ஒரு காதலர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யாஷிகா காதலை ஒப்புக் கொண்டு மகத்தை வில்லன் போன்று காண்பிக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X