2 நாள் தான் ஆகுது, அதற்குள் போரடிக்குது: முடியல பிக் பாஸ் முடியல #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 2 நாட்களிலேயே போரடிக்கத் துவங்கிவிட்டது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தும் சுவாரஸ்யம் இல்லை. நிகழ்ச்சி துவங்கிய 2 நாட்களிலேயே போர் அடிக்கிறது.
என்னத்த பிக் பாஸு, என்னத்த போய் பார்க்க என்று சலிப்புத் தட்டிவிட்டது.

நிகழ்ச்சி
ப்ரொமோ வீடியோக்களை பார்த்தால் பரபரப்பாக இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியை பார்த்தால் சப்பையாக இருக்கிறது என்ற கமெண்டுகளையே சமூக வலைதளங்களில் அதிக அளவில் பார்க்க முடிகிறது.

காதல்
தொலைக்காட்சி தொடர்களில் சண்டை சச்சரவு, காதல் காட்சிகளை பார்த்துப் பழகிய மக்களுக்கு பிக் பாஸ் வீட்டில் சண்டை எதுவும் இல்லாமல் மொக்கையாக இருப்பது பிடிக்கவில்லை.

நித்யா
பாலாஜி, நித்யா இடையே சண்டை ஏற்படும் என்று எதிர்பார்த்து அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் சண்டை போட்டாலும் அதை பார்க்க பார்வையாளர்கள் தயாராக இல்லை.

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் ஏதாவது சுவாரஸ்யமாக நடக்கும், சில மோதல், காதல் எல்லாம் நடக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது புலி வருது கதையாகிவிடும் போல. சீக்கிரமாக ஏதாவது செய்யுங்க பிக் பாஸ். இல்லைனா கதை கந்தல் தான்.

குணச்சித்திரம்
மகத் ராகவேந்திரா படங்களில் தான் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார் என்றால் பிக் பாஸ் வீட்டிலும் அப்படியே தான் உள்ளார். யாஷிகா தமிழில் பேசுவதை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அவரும் மொக்கை போடுகிறார் என்பதை மறுக்க முடியாது.

ஏமாற்றம்
ஒவ்வொரு எபிசோடையும் பார்க்கும் போது ஏதாவது நடக்கும் நடக்கும் என்ற எதிர்பார்த்தால் ஒன்றும் நடக்காமலேயே முடிந்துவிடுகிறது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஆவல் வெகுவாக குறைந்துவிட்டது. வார இறுதி நாட்களில் கமல் வந்து ஏதாவது அரசியல் பேச மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு மட்டுமே மிச்சம் உள்ளது.


Click it and Unblock the Notifications











