கடைசி நாளும், அதுவுமா அசிங்கப்பட்ட பிக் பாஸ்
சென்னை: கடைசி நாளும், அதுவமாக பிக் பாஸ் அசிங்கப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த விஜயலட்சுமி நேற்று இரவே அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டார். முன்னாள் போட்டியாளரான ஆரவ் வந்து விஜியை அழைத்துச் சென்ற தகவல் இரவே அனைவருக்கும் கிடைத்துவிட்டது.

இது தெரியாமல் டுவிஸ்ட் வைக்கிறேன் என்ற பெயரில் ஆரவ் வந்து ரித்விகாவை அழைத்துச் செல்வது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் பிக்கு பாஸு, விஜி நேற்றிரவே அவர் வீட்டிற்கு சென்ற விஷயம் எங்களுக்கு தெரியும். சும்மா வந்து காமெடி பண்ணாதீங்க என்று கலாய்த்துள்ளனர்.
ப்ப்ப்பா செம டுவிஸ்ட் வைத்திருக்கிறார் பிக் பாஸ். ப்ரொமோ வீடியோவை பார்த்து அப்படியே நம்ப யாருமே தயாராக இல்லை என்பது அவருக்கு ஏன் இன்னும் புரியவில்லை.
இது தான் உங்க டக்கா பிக் பாஸ்?
Comments


Click it and Unblock the Notifications