நீ தான் என் பொன் வசந்தம்.. காதலர் போட்டோவை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்குலின்.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜாக்குலின்,. காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, நீ தான் எந்தன் பொன்வசந்தம் எந்த பாடலையும் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் ஜாக்குலின். அந்நிகழ்ச்சியை ரக்ஷன் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார் ஜாக்குலின், இவர்கள் இருவரும் காமினேஷன் சிறப்பாக இருந்தது என்று சொல்லு அளவிற்கு இருந்தது. இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடித்தார்.அதன்பின் சினிமா பக்கம் சென்ற ஜாக்குலின், கடந்த 2018-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரியஅளவில் வெற்றிப்பெற்றது.

நடிகை ஜாக்குலின்: கோலமாவு கோகிலா படத்திற்கு பின் வெற்றிக்கு பிறகு ஜாக்குலினுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும்என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சினிமாவில் பெரிய வாய்ப்பு எதுவும் வராததால், மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஜாக்குலின், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். வீட்டிற்குள் வந்ததுமே, அடுத்த கேள்விகளை சண்டைக்கோழியாக வலம் வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்களும் ஜாக்குலினா இப்படி என்று யோசித்தார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல. ஜாக்குலினின் உண்மையான குணம் பிடித்துப்போய், அவர் எத்தனை முறை நாமினேட் ஆனாலும், அவருக்கு ஓட்டு போட்டு அவரை வீட்டில் இருக்க வைத்தனர். பிக் பாஸ் வரலாற்றிலேயே 15 வாரமும் நாமினேட் ஆன ஒரே போட்டியாளர் ஜாக்குலின் தான்.
கடைசி நேரத்தில் மிஸ்: ஜாக்குலின் எப்படியாவது டைட்டிலை பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் நினைத்து இருந்த,ரசிகர்கள் என் மீது வைத்து இருக்கும் நம்பிக்கைக்கான நான் பணபெட்டியை எடுப்பேன் என்று பணப்பெட்டியை எடுக்க சென்றார். ஆரம்பத்தில் வேகமாக சென்ற ஜாக்குலின், பணப்பெட்டியுடன் திரும்பும் போது சோர்ந்து விட்டதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வர முடியாததால் அவர் எலிமினேட் ஆகி வெளியேறினார். இதனால், அவரால் இறுதிப்போட்டி வரை தொடரமுடியாமல் போனது. அவர் மட்டும் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்திருந்தால் நிச்சயம் ஜாக்குலின் இரண்டாம் இடத்தை பிடித்து இருப்பார் என அவரது ரசிகர்கள் இணையத்தில் புலம்பினார்கள்.
நீ தான் என் பொன் வசந்தம்: இந்நிலையில், ஜாக்குலின்தனதுஇன்ஸ்டாகிராம்பக்கத்தில்காதலர்தினத்தைமுன்னிட்டு, தனதுகாதலருடன்இருக்கும்போட்டோவைவெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல்நீதான்என்பொன்வசந்தம்என்றபாடலையும்தனதுகாதலுக்குடெலிக்கேட்செய்துள்ளார். ஜாக்குலின்காதலர்
யுவராஜ் செல்வநம்பி, இவர் கேமராமேன் ஆக பணியாற்றி வருகிறாராம். தற்போது இணையத்தில் இந்த போட்டோ படுவைரல் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











