த்ரிஷாவே தோத்துடும்.. மட்ட பாடலுக்கு மரியா ஜுலியானா போட்ட குத்தாட்டம்.. வேறலெவல் சம்பவம்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான "மட்ட" பாடலுக்கு விஜய் மற்றும் த்ரிஷா வேறலெவலில் நடனம் ஆடியிருப்பார்கள். அந்த பாடலுக்கு பலர் ரீல்ஸ் வீடியோக்களை போட்டு வைப் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பிக் பாஸ் ஜூலி மட்ட பாடலுக்கு போட்டு இருக்கும் வீடியோ ரீல் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் கவனத்தை உடனடியாக கவர்ந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 1ல் வீரத்தமிழச்சியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தவர் தான் மரியா ஜூலியானா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

goat julie bigg boss

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் சிம்பு ஹோஸ்ட் செய்த நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். சினிமாவில் சில படங்களில் நடித்த இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல்களில் நடித்து வருகிறார்.

5 நிமிஷம் வீடியோ: கமல்ஹாசன் பிக் பாஸ் ஹோஸ்ட்டாக இருந்ததிலேயே ஜூலிக்கு போட்ட அந்த 5 நிமிஷம் குறும்பட வீடியோவை எப்போதுமே ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு வீரத்தமிழச்சியாக உள்ளே வந்த ஜூலியை பொய் பேசும் நபர் இவர் என வெளிச்சம்போட்டுக் காட்டி ஜூலியை ட்ரோல் மெட்டீரியலாகவே மாற்றியது அந்த சம்பவம்.

ஏகப்பட்ட ரசிகர்கள்: பிக் பாஸ் முதல் சீசன் முடிவில் ஜூலியை பலரும் ட்ரோல் செய்தாலும் அவருக்குள் இருக்கும் நல்ல உள்ளத்தை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது. பலருக்கு உதவும் நல்ல குணம் கொண்டவர் ஜூலி என்பதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஃபேனாக உள்ளனர்.

மட்ட பாடலுக்கு மரியானா ஜூலி வீடியோ: பிக் பாஸ் அல்டிமேட்டின் ஃபைனலிஸ்ட்டான ஜூலிக்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையில், தொடர்ந்து அடிக்கடி இன்ஸ்டாகிராம் ரீல்களை போட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் டிரெண்டாகி வரும் மட்ட பாடலுக்கு ஜீப் காரில் ஏறிக் கொண்டும் கீழே இறங்கி ஆட்டம் போட்டும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரீல் ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி உள்ளன.

ஓவர் மேக்கப்: மஞ்சள் கலர் சாரி கட்டாமல் சிகப்பு நிற உடையை அணிந்துக்கொண்டு ஓவர் மேக்கப்புடன் ஜூலி வெளியிட்டுள்ள மட்ட ரீல் வீடியோ அதிகளவில் பிக் பாஸ் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், ஜூலியை ஆதரித்தும் எதிர்த்தும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X