அண்ணா பயமா இருக்குண்ணா.. கிட்னி சட்னின்னு வந்தாய்ங்க.. மீண்டும் முதலமைச்சர் விஜய்யை சீண்டிய ஜூலி!
சென்னை: வேலூர் பரப்புரையில் ஒன்றுமில்லை என்று சொன்னதற்குத்தான் கிட்னி சட்னின்னு கொண்டு வந்தாய்ங்க என்று மீண்டும் முதலமைச்சர் விஜய்யை சீண்டி ஜூலி புதிய வீடியோ ஒன்று பேசி போட்டுள்ளார். சமீபத்தில் தவெகவினரை எதிர்த்தும் விஜய்யை எதிர்த்து பேசியதற்காக என் வாழ்க்கையே போச்சு என பிரஸ் மீட் ஒன்றை நடத்தி பரபரப்பை கிளப்பியிருந்தார் பிக் பாஸ் ஜூலி.
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின் போது செவிலியரான ஜூலி "சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா" என கோஷம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்புக் கிடைத்தது. சின்னத்திரை மற்றும் சினிமா வாய்ப்புகள் அதன் பின்னரும் பெரிதாக கிடைக்காத நிலையில், மீண்டும் நர்ஸ் தொழிலையே பார்த்து வந்த ஜூலி பெரம்பூரில் வாடா விஜய் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கிட்னி திருட்டு சர்ச்சை: தவெக கட்சியை திமுகவுடன் சேர்ந்துக் கொண்டு பிக் பாஸ் ஜூலி கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில், கிட்னி திருட்டில் பிக் பாஸ் ஜூலி ஈடுபட்டார் என சில வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை பற்ற வைத்தது. சமீபத்தில் அளித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கணவரை மூனாவது புருஷன்னு சொல்றாங்க, கிட்னி திருட்டு வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்துறாங்க என புலம்பித் தள்ளினார்.
என் கரு கலைந்ததற்கு: மேலும், தனது கரு கலைந்ததற்கு விஜய் தான் காரணம் என்கிற அபாண்டமான பழியையும் தூக்கிப் போட்டார். அதனை தொடர்ந்து திமுக நடத்திய ஜென் ஸி நிகழ்ச்சியிலும் பங்கேற்று தொடர்ந்து தவெகவுக்கு எதிரான பேசுவேன் என்றார். ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பிரபலங்கள் இவரெல்லாம் ஜென் ஸியா என கலாய்த்து தள்ளினர். இந்நிலையில், திருச்சியில் நேற்று விஜய் பேசியதற்கு அவர் எதிர்பார்த்தது போலவே திமுக தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்ப ஜூலியும் ஒரு வீடியோவை இறக்கியுள்ளார்.
ரொம்ப பயமா இருக்குண்ணா: வேலூர் பரப்புரையில் விஜய் பேசியதில் ஒண்ணுமில்லை என்று சொன்னதற்குத்தான் கிட்னி சட்னின்னு கொண்டு வந்தாய்ங்க, இப்போ திருச்சியிலும் ஒன்றுமில்லை என சொல்லத் தோன்றுகிறது. ஆனால், அவர் வேறு நிர்வாகம் பொறுப்பல்ல என பேசியுள்ளார். அதெல்லாம் பார்த்தால் ரொம்ப பயமா இருக்குண்ணா ரொம்ப பயமா இருக்கு என மீண்டும் விஜய்யை சீண்டி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால், ஜூலியின் சவுண்டு முன்பை போல இல்லையே என்றும் உள்ளுக்குள் பயந்துக் கொண்டு திமுகவிடம் வாங்கிய பணத்துக்கு வீடியோ போடுகிறாரா என தவெகவினர் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications