கையை எடுங்க ஜூலி.. மறைக்குது.. கொஞ்சி விளையாடும் ரசிகர்கள்!

சென்னை: அங்க சுத்தி இங்க சுத்தி பிக் பாஸ் ஜூலி டைட்டானிக் பட ஹீரோயினை காப்பி பண்ணி அவரைப்போல எடுத்திருக்கும் போட்டோஸ்கள் வைரலாக இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.

Recommended Video

BREAKING: விரைவில் தொடங்குகிறது BIGG BOSS 5 TAMIL | Kamal Hassan

கொஞ்ச நாட்களாகவே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நடிகை நடிகர்கள் போட்டோஷூட் என்கிற பெயரில் பாடாய் படுத்தி வருகிறார்கள் .

அதுவும் பிக்பாஸ் ஜூலியை கேட்கவே வேண்டாம். பிக் பாஸில் இருக்கும் போது அம்மாஞ்சியாக இருந்த இவர் தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து உலகத்தை நன்றாக புரிந்து கொண்டார் போல.

மாடலிங்கில் கலக்கல்

மாடலிங்கில் கலக்கல்

உலகத்திற்கு ஏற்ப அவரும் நடைபோட கற்றுக்கொண்டு மாடலிங்கில் கலக்கி வருகிறார். இந்த வீட்டிற்குள் இருக்கும்போது அவரை தவிர அனைவருமே நடிகர் நடிகைகளாக இருந்ததால் எனக்கு நடிக்க தெரியாது தெரியாது என்று சொல்லி நன்றாகவே நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது வெளியே வந்ததும் முழுநேரமாக நடிப்புத் துறைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

மாடலிங்கே சூப்பர்

மாடலிங்கே சூப்பர்

இவர் நடிக்க தான் வந்து விடுவார் என்று பலபேர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரும் அந்த மாதிரியே மாடலிங்கில் தேர்வு செய்துவிட்டார். தற்போது ஒரு சில படங்களில் அவர் நடித்து கொண்டிருந்தாலும் முழுநேரமாக மாடலிங்கில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் .பல விளம்பரங்களில் மாடலாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் இவர்.

உருகி உருகி

உருகி உருகி

அதற்காக எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவருடைய போட்டோக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியாகி வருகின்றனர். சில நேரங்களில் போட்டோக்களில் புதுமையாக செய்கிறேன் என்று ஏதாவது பண்ணி வைத்துவிடுகிறார். அதனைப் பார்த்ததும் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல இதனை வைத்து நன்றாக கலாய்த்து வருகின்றனர்.

போட்டோஷூட்

போட்டோஷூட்


அவர் நடத்திய மெழுகுவர்த்தி போட்டோசூட்டிலும் வேற லெவல் வைரலாகி வந்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு போட்டோசூட்டிலும் ரூம் போட்டு யோசித்து வித்தியாசமாக எடுத்து வருகிறார். பல நடிகைகளும் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் இவரது போட்டோஸ்கள் வித்தியாசமாகவே இருந்துவருகிறது .அதனால் தான் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர்.

சூடான போட்டோஸ்

சூடான போட்டோஸ்

கலாய்க்கும் நெட்டிசன்கள் ஒரு பக்கம் என்றால் அவரை ஆதரிக்கும் ரசிகர்கள் பல மடங்கு பெருகி வருகின்றனர். அதனால் தான் இவருடைய காட்டில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. கடற்கரையில் புரண்டும் தண்ணீரில் நனைந்த படியும் பலரை தூங்கவிடாமல் தவிக்க விட்டு விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது டைட்டானிக் பட ஹீரோயினை காப்பியடித்து அவரை மிஞ்சும் அளவிற்கு கலக்கலான ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார்.

வைரல் போட்டோஸ்

வைரல் போட்டோஸ்

இந்த போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது. எப்போதும் இவர் போடும் போஸ்ட்களை இவருடைய ரசிகர்களும் தங்களுடைய ஐடியில் இருந்து ஷேர் பண்ணி வருவார்கள் .அது போலத்தான் இப்போதும் இவருடைய ரசிகர்கள் இந்த வீடியோக்களை வைரலாகி வருகின்றனர் .ரசிகர்கள் மட்டுமல்லாமல் இதனை நெட்டிசன்களும் ட்ரோல் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்

ஜாலியா எடுத்துப்பார்

ஜாலியா எடுத்துப்பார்

யார் என்ன செய்தாலும் நமக்கு பப்ளிசிட்டி தானே முக்கியம் என்று மௌனமாக இருக்கும் ஜூலிக்கு இது ஒருவகை விளம்பரம் தான். அதனால் அவரும் ஒன்றுமே சொல்லாமல் தான் இருந்து வந்து கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெண்ணாக இருந்தாலும் நான் செவிலியர் என்று உரக்கக் கூறி முன்னின்று நடத்தியவர் இவர். தற்போது அந்த வேலையை அப்படியே மறந்து விட்டார்.

டோன்ட் கேர்

டோன்ட் கேர்

அதனால் இவரை வைத்து நெட்டிசன்கள் சந்திரமுகி படத்தில் வரும் ஜோதிகாவின் கேரக்டரை போல இவர் அப்படியே நடிகையாக மாறி விட்டார் என்று கலாய்த்து வருகின்றனர் .ஆனால் கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு ஜூலி ஒரே வார்த்தையில் பதில் கூறி விட்டார். நான் எப்போதுமே எனக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை கண்டுகொள்வதே இல்லை.

அசால்ட்

அசால்ட்

அதையும் பாசிட்டிவாக மட்டும்தான் நினைத்துக்கொள்வேன் என்னுடைய ரசிகர்கள் மட்டும் எனக்கு போதும் கலாய்ப்பவர்கள் கலாய்ச்சு கொண்டு கீழே தான் இருப்பார்கள் நான் ஒவ்வொரு படியாக மேல் ஏறி சென்று கொண்டே இருப்பேன் என்று அசால்டாக கூறியிருக்கிறார். ஆனாலும் இவர் எவ்வளவு தான் தைரியமாக கமெண்ட் போட்டு நெட்டிசன்களுக்கு பதில் அளித்தாலும் ரசிகர்கள் விடுவதில்லை.

கையை எடுங்க

தற்போது இவருடைய வீடியோவை பார்த்து ரசிகர்களே இது ஜூலி தானா அல்லது மீண்டும் டைட்டானிக் படம் ஹீரோயினி வந்துவிட்டார்களா என்று சந்தேகத்தில் இருக்கின்றனராம் .அதுவும் போதாது என்று சில ரசிகர்கள் இவரை கொஞ்சி குலாவி கமெண்டுகளை குவித்து வருகின்றனர். அதை விட பலர் கையை எடுங்க ஜூலி மறைக்குது என்றும் கொஞ்சிக் குலாவி கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X