தீய சக்தியின் துணையோடு தூய சக்தியின் ஆட்சி.. கலாய்த்த ஜூலி.. விஜய்க்காக கண்ணீர் விட்ட தாமரை!
சென்னை: திமுக கூட்டணியை தீய சக்தி என தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த நிலையில், 108 இடங்களில் பெரும்பான்மையாக வென்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான 118 எனும் மெஜாரிட்டி நம்பரை விஜய் எட்டாத நிலையில், ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
மே 7ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 8ம் தேதி தற்போது தான் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தந்துள்ளன.

இந்நிலையில், தீய சக்தியின் துணையோடு தூய சக்தி ஆட்சியமைக்கிறது என பிக் பாஸ் ஜூலி பதிவிட்டுள்ளார். இன்னொரு பக்கம் விஜய்யை இத்தனை நாட்கள் இழுத்தடித்து விட்டார்களே பாவிகள் என தாமரை கண்ணீர் விட்டு அழுத வீடியோவும் வைரலாகி வருகிறது.
ஒட்டுமொத்தமா அள்ளிய விஜய்: திமுகவிடம் இருந்த பல தொகுதி மக்களின் வாக்குகளை வென்று பல இடங்களுக்கு ஸ்டாலின் நின்ற கொளத்தூர் உள்பட மொத்தமாக விஜய் தனது முதல் தேர்தலிலேயே அள்ளி 2 சதவீதம் கூட ஓட்டு வாங்க மாட்டார். விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கிலேயே தோற்பார் என கணித்தவர்களுக்கு எல்லாம் முகத்தில் கலர் பொடி தூவி ஹோலி கொண்டாடி விட்டார். இப்போ திமுகவிடம் இருந்த கூட்டணி கட்சிகளையும் மொத்தமாக தனது பக்கம் கவர்ந்து விட்டார் விஜய்.
கண்ணீர் விட்டு அழுத தாமரை: விஜய் எப்படியாவது வென்று விட வேண்டும் என தொடர்ந்து அவருக்கு தனது கணவருடன் சேர்ந்து ஆதரவு தெரிவித்து ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களை தாமரை வெளியிட்ட நிலையில், தற்போது விஜய்க்கு ஆதரவு கிடைத்து விட்டது தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அவர் தான் என்பதை அறிந்த நிலையில், கண்ணீர் விட்டு அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மக்கள் முன்பே 118 இடங்களில் விஜய்யை வெல்ல வைத்திருந்தால், இப்படி மத்தவங்க கிட்ட கையேந்தி நிற்காதே விஜி என உருக்கமாக பேசியுள்ளார்.
தீய சக்தியின் துணையோடு: பிக் பாஸ் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில், "தீய சக்தியின் துணையோடு தூய சக்தியின் ஆட்சியமைக்கும் விஜய்" என பதிவிட்டு கலாய்த்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் பலரும் நீங்களே திமுகவை தீய சக்தி என சொன்னால் எப்படி என கிண்டல் செய்து வருகின்றனர். ஸ்டாலின் போட்ட பிச்சையால் தான் விஜய் ஆட்சிக்கு வந்தார் என வரலாறு சொல்லட்டும் என விஜய்க்கு எதிரான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. இதற்கு மேல் விஜய் மேலும், பலமாகிவிடுவார். அடுத்த 5 வருஷத்துக்குள் எல்லாத்தையும் ஸ்ட்ராங் ஆக்கிவிட்டால் திமுக, அதிமுக நிலைமை அவ்வளவு தான் என தவெகவினர் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications