"எமோஷனல்" ஷகீலா.. கலக்கும் கன்னடத்து பிக் பாஸ்!
பெங்களூரு: ஒரு காலத்தில் மலையாளத்து சூப்பல் ஸ்டார்களை தனது கவர்ச்சிப் படங்களால் கவிழ்த்துப் போட்டு வைத்திருந்த கவர்ச்சி நடிகை ஷகிலா பங்கேற்றுள்ள கன்னடத்து பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.. ஷகீலாவின் எமோஷனல் பேட்டி காரணமாக.
ஸ்வர்ணா டிவியில் கன்னட நடிகர் சுதீப் நடத்தி வரும் பிக் பாஸ் 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடிகை ஷகிலா பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஷகிலா அளித்துள்ள பேட்டிதான் கன்னட டிவி சேனல்களின் ஹாட் டாபிக்.

கவர்ச்சிக்குள் தள்ளப்பட்டேன்
தன் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்கள் பற்றியும், தான் சினிமாவுக்குள் தள்ளப்பட்டது பற்றியும், கவர்ச்சி படங்களில் விழுந்தது பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

குடும்பத்தினரை பழிவாங்குவேன்
தன்னோட வாழ்க்கை துயரங்களுக்கு தனது குடும்பத்தினர்தான் காரணம் என்றும் மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இதே குடும்பத்தில் பிறந்து அவர்கள் அனைவரையும் பழிவாங்க வேண்டும் என்றும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். இவரது பேட்டி யூ டியூப்பிலும் ஹிட் அடித்துள்ளது.

ஷகிலாவின் டிவி பேட்டி
இதுவரை ஷகிலாவின் பிரத்யேகப் பேட்டி எந்த தமிழ் சேனல்களிலும் ஒளிபரப்பானதில்லை. முதன் முதலாக கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உருக்கமாக பேட்டி கொடுத்துள்ளார் ஷகிலா.

சென்டிமென்ட் ஷகிலா
கடந்த சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது பங்கேற்பு சரியில்லை என்று கூறி வெளியேற்றப்படும் தருவாயில் இருந்தார். தற்போது, இந்த சென்டிமென்ட் பேச்சு ரசிகர்களிடம் உருக்கத்தை வரவழைத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











