முடிவுக்கு வந்தது 4 ஆண்டு திருமண வாழ்க்கை.. விவாகரத்தை அறிவித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்!
சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற பிரபல நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். திருமணமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பரஸ்பரமாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்து உள்ளனர். இவர்களின் இந்த முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திரைப்பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. 18 ஆண்டுகள் மனம் ஒத்து வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இன்ஸ்டாகிராமில் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். அதே போல, ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்துள்ளனர். இப்போது எல்லாம் விவாகரத்து அறிவிப்பு எல்லாம் இன்ஸ்டாகிராமில் தான் தெரியவருகிறது.

இந்த வகையில் பிக் பாஸ் கன்னடம் ஐந்தாவது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் டைட்டில் வின்னராக பட்டம் பெற்ற நடிகர் சந்தன் தனது மனைவி நிவேதிதா என்பவரை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 ஆண்டுகளில் இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இசையமைப்பாளரான சந்தன் ஷெட்டி பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார். இவர் இன் ரயில்வே சில்ட்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அடுத்ததாக ஷரண் மற்றும் மேகனா கவுன்கர் நடித்த சூ மந்தர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுமட்டுமில்லாமல், தனிப்பாடல்களிலும் பணியாற்றியுள்ளார். அதே போல நிவேதிதா கவுடா நடிகை மற்றும் மாடலும் ஆவார். பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தனது தனித்துவமான உச்சரிப்புக்காக பலராலும் பாராட்டப்பட்டவர்.

இவர்கள் இருவரும், பிக் பாஸ் கன்னட சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். பின் அது காதலாக மாறியதை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்து, பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை நிவேதிதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர் ’இந்த நாள் நானும் சந்தனும் நல்ல புரிதலோடு ஒருமனதாக விவாகரத்து பெற முடிவு எடுத்து உள்ளோம். நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் சட்ட ரீதியாக பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையுடன் இருப்போம்’ என தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் இந்த முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











