அய்யய்யோ கெமி.. காற்றில் பறக்கும் குட்டி உடை.. தாய்லாந்தில் மஜா போட்டோஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கெமி தற்போது தாய்லாந்தில் ஜாலியாக சுற்றி வருகிறார். சென்னையில் வெயில் கொளுத்திக்கொண்டு இருக்க, கெமி தாய்லாந்தில் கடற்கரையில் காற்றுவாங்கி ஆட்டம் போட்டுள்ளார். அதீத கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் 20 பேர் போட்டியாளர்களில் ஒருவராக கறமிறங்கினார் கெமி. தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கிய கெமி, விஜய்டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட பிறகு தான், மீடியாவின் வெளிச்சம் கெமி மீது பட்டது. இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

பிக் பாஸ் கெமி: பிக் பாஸ் வீட்டில் கெமி சிறப்பாக விளையாடினார். இதனால், இறுதி வரை இவர் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கெமி நாமினேஷனில் சிக்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஒரு நல்ல போட்டியாளர் வெளியேறியதால் ரசிகர்கள் இது அன்பேர் கேம் என கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். பிக் பாஸ் வீட்டில் 50 நாட்கள் இருந்த கெமிக்கு தினம் 8 ஆயிரம் வீதம் என சம்பளமாக 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காற்றில் பறக்கும் குட்டி உடை: கெமி அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தாய்லாந்திற்கு சென்றார். அங்கு, பட்டாயாவில் பிறந்த நாளை உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி இருந்தார். அந்த வீடியோவை கெமி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். பிறந்த நாள் முடிந்த பிறகும் தாய்லாந்தை விட்டு வராமல் அங்கேயே இருக்கும் கெமி, தனது இன்ஸ்டாகிராமில் கடற்கரையில் கவர்ச்சி உடையின் மணலில் புறண்டு லூட்டி அடித்து இருக்கும் போட்டோவை போட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் சம்பாதித்த பணத்தை காலி பண்ணாம்மா வரமாட்டீங்க போல என்றும், அதீத கவர்ச்சி போட்டோஸ் சூப்பர் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கெமி பகிர்ந்த இந்த போட்டோஸ் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











