Bigg Boss: அடித்துக் கொண்ட போட்டியாளர்கள்.. நிகழ்ச்சியை நிறுத்திய மலையாள பிக்பாஸ்.. சேட்டன்கள் ஷாக்!
கொச்சி: பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது. தமிழில் அறிமுகமான போது பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் காலப்போக்கில் எதிர்ப்புகள் பலவும் நேர்மறையாக மாறிப்போனது. இந்நிலையில் மலையாளத்தில் சீசன் 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. மோகன்லால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இருக்கும்போது, 7வது சீசன் தொடங்கிய 2 வது வாரத்திலேயே நிறுத்தப்படுவதாக பிக் பாஸ் தெரிவித்தது, போட்டியாளார்களை மட்டும் இல்லாமல், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 ஆனது, கடந்த 3ஆம் தேதிதான் தொடங்கப்பட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படி இருக்கும்போது முதல் வாரம் சிறப்பாகவே சென்றது. இரண்டாவது வாரத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் முன்னரே வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் ஒரு போட்டியாளர் களமிறங்கியதால் மொத்தம் 21 போட்டியாளர்களாக மாறினார்கள்.

சண்டை: இந்நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலேயே போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் தரப்பில் போட்டியாளர்களை வரிசைப் படுத்தும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் மத்தியில் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்துள்ளது. குறிப்பாக ஆண் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டார்கள். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத பிக் பாஸ் குழுவினர் உடனே இந்த அடிதடியை நிறுத்தி உள்ளனர். மேலும் சக போட்டியாளர்களும் அடிதடியை நிறுத்த முயற்சித்துள்ளனர். வழக்கமாகவே இதுபோன்ற டாஸ்க் 50 நாட்களுக்குப் பின்னர் தான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும்.
போட்டி நிறுத்தம்: இந்நிலையில் தற்போது பிக் பாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட புரோமோவில், போட்டியாளர்கள் அடித்துக் கொண்டதால், இந்த சீசன் நிறுத்தி வைக்கப்படுவதாக பிக்பாஸ் தெரிவிக்கிறார். மேலும் இனி பிக்பாஸ் தரப்பில் எந்தவிதமான அறிவுரைகளும் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கிறார். இந்த புரோமோ போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் ஷாக்கை கொடுத்துள்ளது. அடுத்து என்ன நடக்குமே என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











