ப்பா.. பிக் பாஸ் மாயாவா இது? அட்லாண்டிக் கடற்கரையில் அப்படியொரு கோலம்.. இணையமே சூடாகிடுச்சு!
சென்னை: ரஜினிகாந்தின் 2.0, கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் விஜய்யின் லியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாயா கிருஷ்ணன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரை போட்டிப் போட்டு கிராண்ட் ஃபினாலே வரை வந்தார். 2வது ரன்னர் அப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெத்தாக வெளியேறிய மாயாவுக்கு அந்த சீசனில் ஏகப்பட்ட ட்ரோல்களும் அவருக்கு ரசிகர்களும் கிடைத்தனர்.
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான மாயா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடித்து வருகிறார். லியோ படத்துக்குப் பிறகு ஃபைட்டர் ராஜா எனும் படத்தில் நடித்து வருகிறார். சியான் விக்ரமுடன் இவர் இணைந்து நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமான மாயா தற்போது தனது தோழியுடன் அட்லாண்டிக் பகுதிக்கு சென்ற நிலையில், அங்கே கடலில் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக குளியல் போட்ட வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் டு சினிமா: கீர குழம்பு, பேர்ட்ஸ், லிட்டில் பிரின்சஸ் என ஏகப்பட்ட தியேட்டர் டிராமாக்களை நடத்தி வந்த மாயா கிருஷ்ணன் வானவில் வாழ்க்கை படத்தின் மூலம் கடந்த 2015ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். தனுஷின் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், மை சன் இஸ் கே, ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல, 2.0, விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி: கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட மாயா ரன்னர் அப்பாக வெளியேறினார். மாயாவுக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என்றும் கமல்ஹாசனின் முழு சப்போர்ட்டும் மாயாவுக்குத்தான் இருந்தது என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில், டைட்டிலை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா தட்டிச் சென்றார். மணி ரன்னர் அப் ஆனார்.
அட்லாண்டிக் கடலில் டூபீஸில் மாயா: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரே ஜாலி மூடில் கோவா உள்ளிட்ட இடங்களுக்கு டூர் அடித்து வந்த மாயா தற்போது அட்லாண்டிக் கடலுக்கு சுற்றுலா சென்று அங்கே நீச்சல் உடையில் கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்று போஸ் கொடுத்த வீடியோவும் கடலில் குளித்து விளையாடிய காட்சிகளையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். பச்சை நிற டூபீஸில் மாயாவை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











