வாழ்றான்யா மனுஷன்.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரனின் புது வீடு எப்படி இருக்கு பாருங்க!
சென்னை: பிக் பாஸ் 8 சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற முத்துக்குமரன் புதிதாக சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு குடி சென்றுள்ள வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் ரூபாய் பணப்பெட்டியை முதல் ஆளாக ஓடிச் சென்று எடுத்து அசத்தினார்.
இந்த சீசனில் அவருக்கு வெற்றி கோப்பையுடன் 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் சென்னையில் தனது நண்பர்களுடன் சாதாரண வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிப்பெயர்ந்துள்ளார்.

புது வீட்டுக்கு முத்துக்குமரன் சென்ற நிலையில் ஹோம் டூர் வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
புது வீட்டில் முத்துக்குமரன்: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட முத்துக்குமரன் சென்னையில் உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் புது வீட்டுக்கு குடிபுகுந்து அம்மாவுடன் இணைந்து பால் காய்ச்சும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு இறுதி வரை பல்வேறு சவால்களை சந்தித்து டைட்டிலை வென்றார்.
வாடகை வீடு: பிக் பாஸ் முத்துக்குமரனின் வீட்டை விஜே வசந்த் என்பவர் விலாக் வீடியோவாக எடுத்த நிலையில், பல லட்சம் கொடுத்து புதுசா நம்ம முத்துக்குமரன் அண்ணன் வீடு வாங்கியிருக்கிறார் என்றதுமே, இதை வீட்டின் ஓனர் பார்த்தா நடக்குறதே வேற என்று சொல்லிவிட்டு, மக்களே இது வெறும் வாடகை வீடு தான் எனக்கூறியுள்ளார். 40 லட்சம் ரூபாய்க்கு எல்லாம் சென்னையில் புது வீடு வாங்குவது என்பது நடக்காத ஒன்று என்பதால் இன்னமும் அதிகம் உழைப்பதற்காக கொஞ்சம் வசதியான வாடகை வீட்டுக்கு வந்திருக்கிறார் முத்துக்குமரன்.
சீக்கிரமே சொந்த வீடு: பிக் பாஸ் முத்துக்குமரனின் வாடகை வீட்டை பார்த்த ரசிகர்கள் சீக்கிரமே சொந்த வீடு வாங்கிடுவீங்க அண்ணா என்று வாழ்த்தினர். புதிய வீட்டில் தனது அம்மாவுடன் புழு பொம்மை, நண்டு பொம்மை எல்லாம் விட்டு விளையாடிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. விஜய் டிவி பிரபலங்கள் பலர் புதுசு புதுசா சென்னையில் வீடு வாங்கி வரும் நிலையில், முத்துக்குமரனும் கூடிய சீக்கிரமே புதுசா வீடு வாங்கி புதுமனை புகு விழாவும் நடத்துவார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











