»   »  ஜுலியை வச்சு புது வீடியோ: இந்த புள்ளைய வச்சே பிக் பாஸ ஓட்டலாம்னு பார்க்குறாங்களோ?

ஜுலியை வச்சு புது வீடியோ: இந்த புள்ளைய வச்சே பிக் பாஸ ஓட்டலாம்னு பார்க்குறாங்களோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பி அடி எல்லோரும் அடங்கிடுவாங்க என்று ஜூலிக்கு ஐடியா கொடுக்கிறார் பரணி.

சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இது என்னய்யா இந்த பிரபலங்கள் இப்படி சின்னப்புள்ளைய விட மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று முகம் சுளித்தனர்.

கமல் நடத்தும் தமிழ் பிக் பாஸ் அதற்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை என்று நிரூபித்து வருகிறார்கள்.

ஜூலி

ஜூலி

டல்லா துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூலியை வைத்து பரபரப்பாகிவிட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி தான் சரியான ஆள் என்று கட்டம் கட்டிவிட்டார்கள்.

நீக்கம்

நீக்கம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரை முதலில் வெளியேற்றுவது என்று அந்த வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டால் ஆளாளுக்கு சொல்லி வைத்தது(கொடுத்தது) போன்று ஜூலி பெயரையே தெரிவித்தார்கள்.

ஆர்த்தி

ஆர்த்தி

நடிகை குண்டு ஆர்த்தியை ஏவிவிட்டு ஜூலியிடம் வம்பிழுக்கவிட்டு அதன் மூலம் பரபரப்பு தேடியுள்ளனர். ஜூலியை டார்கெட் செய்தே நிகழ்ச்சியை ஓட்டுகிறார்கள்.

தூத்தூ

பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் அல்ல ப்ரொமோ வீடியோக்களை கூட பார்ப்பவர்கள் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று புதிய ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பரணி

பரணி

ஜூலி எல்லோரும் சேர்ந்து உன்னை டார்கெட் பண்ணுகிறார்கள்ல நீ திருப்பி அடி அடங்கிடுவாங்க என்று நடிகர் பரணி ஜூலிக்கு ஐடியா கொடுக்கும் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

English summary
Tamil Bigg Boss show has succeeded in irritating the viewers. Today they have released a new promo video featuring Julie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil