அமீர் VS பாவனி திருமணமா? காதலர் தினத்தில் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜோடிதான் அமீர் - பாவனி ரெட்டி. பிக் பாஸ் வீடு என்றாலே அதில் காதல் வராமல் இருக்காது, ஆனால், அந்த காதல் வெளியே வந்தவுடன் காணாமல் போய்விடும், பிக்பாஸ் சீசன் 6-ன் போது காதலித்த அமீரும் பாவனியும் அதே அன்புடன் இப்போதும் காதலித்து வருகின்றனர். தற்போது பாவனி காதலர் தினமான இன்று இன்ஸ்டாகிராமில் ஒரு நல்ல விஷயத்தை கூறியுள்ளார்.
நடிகை பாவனி ரெட்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே, சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கதை சொல்லும் டாஸ்கில் தனது காதல் குறித்தும், தனது கணவர் திருமணமாகி எட்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் கண்ணீர் மல்க கூறியிருந்தார். பாவனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகத்தை கூறியதற்கு பிறகு, அவரின் மீதான பார்வையே மாறியது.

நடிகை பாவனி ரெட்டி: இந்த நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர் வந்ததும் வராததுமாக பவானி ரெட்டியின் பின் சுற்றிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பாவனியை காதலிப்பதாக கூறி, முத்தமும் கொடுத்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அமீர் பல நாட்களாக பாவனியை காதலிப்பதாக சொன்ன போதும், அதை, பாவனி ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதையடுத்து, பிபி ஜோடி நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் தனது காதலை சொன்ன போது, அதை பாவனி ஏற்றுக்கொண்டார்.
திருமணத் தேதியா: அமீரை விட பாவனி வயதில் மூத்தவராக இருந்தாலும் காதலுக்கு வயது தடை இல்லை என இருவரும் காதலித்து வருகின்றனர். தற்போது, இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களின் லிவ்விங் ரிலேஷன்ஷிப் சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை எல்லாம் இவர்கள் இருவரும் கண்டுகொள்வதில்லை , இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், ரசிகர்களோ, இவர்களிடம் எப்போது கல்யாணம் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு coming soon என ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், திருமண தேதியா என்றும், இல்லை அடுத்த படத்திற்கான அறிவிப்பா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











