நான் கொலைகாரியா.. என்ன மோசமான கமெண்ட்.. கண்கலங்கி பேசிய பாவனி ரெட்டி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு அனைவரின் மனதை வென்றவர் தான் பாவனி ரெட்டி. அந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக வந்த அமீர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததுமே பாவனியை காதலிப்பதாக கூறினார். ஒரு வழியாக அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவனி, அமீர் மீதான காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

நடிகை பாவனி ரெட்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.மக்கள் மனதில் இடம்பிடித்த அவர், சில காரணங்களால் நடிப்பதில் இருந்து விலகினார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கதை சொல்லும் டாஸ்கில் தனது காதல் குறித்தும், தனது கணவர் திருமணமாகி எட்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

pavani reddy amir

இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறி, முத்தமும் கொடுத்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.அமீர் பல நாட்களாக பாவனியை காதலிப்பதாக சொன்ன போதும், அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதையடுத்து, பிபி ஜோடி நிகழ்ச்சியில் அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார்.

பாவனி, அமீரை விட வயதில் மூத்தவர். இருந்தாலும் வயது காதலுக்கு தடை இல்லை என இருவரும் காதலித்து வருகின்றனர்.

தற்போது, இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருவது சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை எல்லாம் இவர்கள் இருவரும் கண்டு கொள்வது இல்லை. நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். ரசிகர்கள் எப்போதும் இவர்களிடம் எப்போது கல்யாணம் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அண்மையில் யூடியூப் சேனலுக்கு இருவரும் பேட்டி அளித்திருந்தனர். அதில், நானும் அமீரும் ஒரு வீட்டில் இருப்பது பற்றி பலரும் பலவிதமாக பேசுகின்றனர். பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் அவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

என் முன்னாள் கணவர், திருமணமான எட்டு மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். அப்போது, நான் தான் அவரை கொலை செய்தேன் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். அதற்கு விளக்கம் கொடுக்க நினைக்கவே இல்லை,, காரணம் காலப்போக்கில்வ எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். இப்போது நான் அமீருடன் இருக்கிறேன். இப்போதும் கூட அடுத்து அமீரை கொலை செய்யப் போறியா என்று கேட்கிறார்கள்.நான் என்ன கொலைகாரியா? நானும் என் கணவரும் எப்படி காதலித்தோம், எப்படி அன்போடு வாழ்ந்தோம் என்று யாருக்குமே தெரியாது. இதைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

அமீர் என்னை நான் காதலியா, பொண்டாட்டியாக பார்க்கவில்லை அவர் என்னை ஒரு மகளை கவனித்துக்கொள்வது போல என்ன பார்த்துக்கொள்கிறார். எங்களுக்கு ஒரு மகள் பிறந்தால், எனக்கு அமீர் மீது பொறாமை தான் வரும் என்று பாவனி ரெட்டி அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X