ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட்.. கொந்தளித்த 3 லட்சம் ஃபாலோயர்கள்.. பிக் பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்
சென்னை: மலையாளத் தொலைக்காட்சித் தொகுப்பாளினியும், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமுமான பெர்லி மானி, நீட் தேர்வுப் போராட்டம் குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் ஆத்திரமடைந்த சுமார் 3 லட்சம் ரசிகர்கள் ஒரே நாளில் அவரை அன்பாலோ செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்
பெர்லி மாணி: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடியடி நடத்தப்பட்டு மாணவர்களை கலைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்த பெர்லி மானி, மாணவர்கள் அடிபட்டு ரத்தம் சிந்துவதைப் பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது. எந்தக் காரணத்திற்காகவும் உங்கள் உயிரை இழக்காதீர்கள். முதலில் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்லுங்கள். எல்லாவற்றையும் பின் பார்த்துக்கொள்ளலாம். இதைவிட உங்கள் உயிர்தான் முக்கியம் எனப் பதிவிட்டிருந்தார்.

கொந்தளித்த இணையவாசிகள்: பெர்லி மானி, பதிவிட்ட கருத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் பொதுமக்களையும் கடுமையாகக் காயப்படுத்தியது. மாணவர்கள் தங்களது எதிர்காலத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கும்போது, வீட்டிற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போராட்டத்தையே பலவீனப்படுத்தும் வேலை என நெட்டிசன்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தனர்.
3 லட்சம் பேர் அன்பாலோ: இதன் விளைவாக, இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்ந்து வந்த சுமார் 3 லட்சம் ஃபாலோயர்கள் அடுத்தடுத்து அவரை அன்பாலோ செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வெளியேறி உள்ளனர்ர. அதுமட்டுமின்றி, நெட்டிசன்களின் தொடர்கள் ட்ரோல்கள் மற்றும் கடுமையான விமர்சனங்களால் தாங்க முடியாமல், தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளின் கமெண்ட் செக்ஷனையே பெர்லி மானி ஆப் செய்து வைத்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட இணையவாசிகள் என்ன சோனமுத்தா போச்சா, இதெல்லாம் தேவையா என கேட்டு வருகின்றனர். உணர்வுபூர்வமாக, சமூக பிரச்சினைகளுக்காக மக்கள் போராடிக்கொண்டு இருக்கும் போது, பிரபலங்கள் கருத்துத் தெரிவிக்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications