Bigg Boss 3 பிறந்தநாளும் அதுவுமா சாண்டிக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்
Recommended Video
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சாண்டி மாஸ்டரை வம்பில் மாட்டிவிட்டுள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் சாண்டி மாஸ்டர் தான் மக்களுக்கு என்டர்டெயின்மென்டாக உள்ளார். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் சாண்டியை மையப்படுத்தி ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சாண்டி
நாமினேட் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்ஸில் ஒருவரை நீங்கள் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிக் பாஸ் சாண்டிக்கு டாஸ்க் கொடுத்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அது நிஜமான டாஸ்க் அல்ல மாறாக பிக் பாஸ் விளையாட்டுக்கு செய்த வேலையாகும் என்பது குறிப்பிடத்ததக்கது.
விபரீதம்
ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் எரிகிற நெருப்பில் பிக் பாஸ் எண்ணெய் ஊற்றுவதாக தெரிவித்துள்ளனர். பாத்திமா பாபு ஆன்ட்டி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக நெட்டிசன்கள் நம்புகிறார்கள். ஆனால் எலிமினேஷன் விஷயத்தில் மட்டும் பிக் பாஸை நம்பவே முடியாது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
சண்டை
பிக் பாஸ் விளையாட்டாக செய்துள்ள காரியத்தால் போட்டியாளர்களிடையே பெரிய சண்டை வரும் என்று நினைக்கிறார்கள் நெட்டிசன்கள். அதிலும் குறிப்பாக வனிதா அக்கா நிச்சயம் சண்டை போடுவார் என்பதில் சந்தேகமே இல்லை என்று பேசிக் கொள்கிறார்கள்.
டாஸ்க்
சாண்டி சும்மாவே ஓவராக சேட்டை செய்வார். இந்நிலையில் அவரை வைத்து பிக் பாஸ் விளையாடுகிறாரா?, வெளங்கின மாதிரி தான். பிக் பாஸ் பேச்சை கேட்டு நடித்து யாரிடமும் அடி வாங்காமல் இருந்தால் சரி. பாவம், பிறந்தநாளும் அதுவுமா சாண்டியை குறி வைத்துள்ளார் பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











