தாடி பாய் கூடிய சீக்கிரமே டாடி ஆகப்போறாரு.. பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி மனைவியின் வளைகாப்பு க்ளிக்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரசிகர்கள் மனதை வென்ற பிரதீப் ஆண்டனியை மாயா அண்ட் கேங் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டை அடுக்கிய நிலையில், அதிரடியாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இயக்குனராக சினிமாவில் கலக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், 2024ல் திருமணம் செய்துக் கொண்ட பிரதீப் ஆண்டனி கூடிய சீக்கிரமே அப்பாவாக போகிறார்.

Bigg Boss Pradeep Antony Wife Baby Shower function happened and photos goes viral

தாடி பாய் என ரசிகர்கள் அவரை செல்லமாக அழைத்து வரும் நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டே அந்த பெயரில் தான் உள்ளது. தாடி பாய் சீக்கிரமே டாடி ஆகப்போறாரு என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அருவி முதல் டாடா வரை: 2017ம் ஆண்டு அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் நடித்து அசத்தியவர் தான் பிரதீப் ஆண்டனி. அந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே இயக்குனர் இயக்கத்தில் வெளியான வாழ் படத்திலும் சிறப்பாக நடித்து கலக்கினார். கவினின் நண்பரான பிரதீப் ஆண்டனி கணேஷ் கே. பாபு இயக்கத்தில் வெளியான டாடா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். ரவி மோகனை வைத்து கணேஷ் கே. பாபு இயக்கியுள்ள கராத்தே பாபு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

பிரதீப் ஆண்டனி மனைவியின் வளைகாப்பு: கடந்த 2024ம் ஆண்டு பூஜா சக்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமண வாழ்க்கையை மனைவியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் பிரதீப் ஆண்டனி விரைவில் தந்தையாக போகிறார். அவரது மனைவி பூஜா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரது வளைகாப்பு நிகழ்ச்சி வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் வாழ்த்து: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து அசிங்கப்படுத்தி பிரதீப்பை வெளியே அனுப்பினாலும் அவருக்கு வெளியில் ஏகப்பட்ட பெண்கள் ரசிகைகளாக உள்ளனர். அவரை விரும்பி ஒரு பெண் திருமணமும் செய்துக் கொண்டார். கூடிய சீக்கிரமே பிரதீப்புக்கு அழகான குட்டி தேவதை பிறக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X