Bigg Boss: திவாகருக்கு 2 கல்யாணம் ஆகிடுச்சாம்.. எல்லா ஆதாரமும் இருக்கு என விளாசிய பிக் பாஸ் பிரஜின்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். எவிக்ட் ஆகி வெளியேறிய திவாகர் தற்போது இறுதி வாரத்தை முன்னிட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சட்டை இல்லாமல் அலப்பறை செய்து வருகிறார்.
திவாகர் தனக்கு திருமணமே ஆகவில்லை என்றும் வெளியான திருமண புகைப்படம் எல்லாம் போலியானவை என பேசிய நிலையில், நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான பிரஜின் பிக் பாஸ் திவாகருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

பிரஜின் மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே நுழைந்த நிலையில், பிரஜின் எவிக்ட் ஆகிவிட்டார். சாண்ட்ரா கிராண்ட் ஃபினாலேவுக்கு செல்லவுள்ளார்.
திவாகருக்கு 2 கல்யாணம்: வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வாயை திறந்தாலே பொய்யாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு 38 வயசுன்னு சொல்றதும் பொய், அவருக்கு திருமணமே ஆகவில்லை என்பதும் சுத்த பொய், அவருக்கு 2 முறை திருமணமாகி விவகாரத்தும் ஆகிவிட்டது. அதற்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு, மேலும், திவாகருக்கு குழந்தையும் இருக்கு என பிக் பாஸ் பிரஜின் போட்டு உடைத்துள்ளார்.
இந்த சீசனை ஓட்டியதே: பிக் பாஸ் சீசன் 9ஐ ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததே ஆரம்பத்தில் திவாகர் தான். அவரை தொடர்ந்து விஜே பார்வதியும் தன்னுடைய விளையாட்டு மற்றும் கன்டென்ட்களால் ஏகப்பட்ட புரொமோக்களில் நிறைந்து இருந்தனர். ஆனால், திவாகர் மற்றும் விஜே பார்வதி என இருவரையும் வெளியே அனுப்பிவிட்டனர். உள்ளே சென்ற திவாகர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் பெண் போட்டியாளரை சப்போர்ட் செய்து பேசிய நிலையில், பிக் பாஸே திவாகரை கண்டித்துள்ளார்.
பேப்பர் ரவுடி என கலாய்: திவாகர் பற்றிய உண்மைகளை பிரஜின் சொல்லிவிட்டார் என்றும் அவர் ஏமாற்று பேர்வழி என்றும் பிரஜின் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வரும் நிலையில், பேப்பர் ரவுடி பிரஜின் மற்றும் சாண்ட்ரா வாயை திறந்தாலே அப்படியே உண்மையைத்தான் பேசுவாங்க, ஆதாரத்தை முதலில் காட்ட சொல்லுங்க என திவாகர் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











