அய்யோ, ஓகே சொன்ன பாவத்திற்கு கமல் இதை எல்லாம் செய்ய வேண்டி இருக்கே
சென்னை: தர்ஷனுடனான உறவின் தற்போதைய நிலை என்ன என்று கமல் ஹாஸன் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் இடையே காதல் என்று பார்வையாளர்கள் நினைத்தார்கள். இந்நிலையில் ஷெரின் வெறும் தோழி மட்டுமே என்று தர்ஷன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தர்ஷன் பற்றிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பதில்
பிக் பாஸ் 3 வீட்டில் உள்ளவர்களை இரண்டு-இரண்டு பேராக அமர வைத்து கமல் கேள்வி கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல் கேள்வி கேட்க அருகில் உள்ளவராக மாறி அந்த போட்டியாளர் பதில் அளிக்க வேண்டும். தர்ஷனுடான உறவின் தற்போதைய நிலை என்ன என்று கமல் கேட்க லாஸ்லியா ஷெரினாக மாறி வெட்கப்பட்டு சிரிக்கிறார்.

ஷெரின்
உங்களின் கண்களுக்கு இந்த வீட்டில் ஷெரின் தான் அழகான பெண்ணா என்று கமல் கேட்க தர்ஷன் அருகில் அமர்ந்திருக்கும் முகென் ராவ் ஆமாம் சார் என்கிறார். இதை கேட்ட தர்ஷனோ, அபிராமி வரும்ல வச்சுக்கிறேன் என்று கூறி கலாய்க்கிறார். இந்த பிக் பாஸ் வீட்டில் யார், யாரை காதலிக்கிறார் என்பதே சரியாக புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கு கமல் சார்.

கமல்
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதம் தெரிவித்த பாவத்திற்கு இந்த கருமம் பிடித்த காதல் பற்றி எல்லாம் கேள்வி கேட்க வேண்டியதாகிவிட்டதே என்கிறார்கள் ரசிகர்கள். சில பார்வையாளர்களோ, இதற்கும் சேர்த்து தானே பிக் பாஸ் கொடுத்திருக்கிறார் துட்டு என்கிறார்கள்.
ஆர்மி
முந்தைய ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸனிடம் கேள்வி கேட்டு அசிங்கப்பட்டார் லாஸ்லியா. ஆனால் லாஸ்லியா ஆர்மியோ அவர் அசிங்கப்படாதது போன்று இப்படி பந்தாவாக பேசிக் கொண்டிருக்கிறது. லாஸ்லியாவுக்காக எப்படி எல்லாம் சமாளிக்கிறார்கள் என்று பாருங்கள்.


Click it and Unblock the Notifications











