பிக் பாஸ் போயிட்டு வந்த பிறகும் பணக் கஷ்டம்.. மேடையில் மீண்டும் ஆடுறது தப்பா.. பொங்கிய ரம்யா ஜோ!
சென்னை: மேடையில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்த சாமானிய பெண்ணான ரம்யா ஜோவுக்கு இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராகவும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே தெருக்கூத்து கலைஞரான தாமரை செல்வியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிகரமாக வெளியேறி வேறலெவலில் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், ரம்யா ஜோவுக்கு பெரிதாக எந்தவொரு வாய்ப்பும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிடைக்காத நிலையில், மீண்டும் மேடையேறி நடனமாடத் தொடங்கிவிட்டார் என ட்ரோல்கள் குவிய ஆரம்பித்த நிலையில், சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது நிலை குறித்து விரிவாக பேசியுள்ளார் ரம்யா ஜோ.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற பல பிரபலங்களே பெரிதாக ஷைன் ஆக முடியாமல், தவித்து வரும் நிலையில், பாதியிலேயே வெளியேறிய ரம்யா ஜோவுக்கு மட்டும் என்ன பெரிதாக சம்பளம் கிடைத்து விடவா போகிறது என்று அவரது ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வொர்ஸ்ட் சீசன்: பிக் பாஸ் இந்தி ஷோவில் பங்கேற்ற ஸ்ருதிகா அர்ஜுன் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த சீசன் ரொம்பவே வொர்ஸ்ட் என்று அடித்து நொறுக்கி விட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் பலரும் காஜி பிடித்து அலைகிறார்கள் என்றும் கூறியுள்ளார். எப்படியோ இந்த சீசன் டைட்டில் வின்னர் பார்வதி தான் என்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். பார்வதி, கம்ருதீன், எஃப்ஜே, ஆதிரை, கனி என பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெயரையே கெடுத்து விட்டனர் என்றும் ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் தனது நிலை மாறவில்லை என ரம்யா ஜோ பேசியுள்ளார்.
மீண்டும் மேடையில் டான்ஸ்: பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 70 நாட்களுக்கும் மேல் இருந்த ரம்யா ஜோ சமீபத்தில், எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் மேடை ஏறி கோயில் திருவிழா ஒன்றில் கவர்ச்சி நடனம் ஆடியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது வாழ்க்கையில் எது மாற வேண்டும் என நினைத்து அந்த ஷோவுக்கு சென்றாரோ அந்த விஷயம் கூட மாறவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சம்பளம் வரவில்லை: பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் முழுமையாக முடியாத நிலையில், தனக்கான சம்பளம் வர லேட்டாகும் என்று விளக்கம் அளித்த ரம்யா ஜோ அதுவரை என்னோட EMIலாம் யாரு கட்டுவா, அதற்காகத்தான் மீண்டும் மேடையேறி நடனமாடி வருகிறேன் என்றும் அதில், ஒரு தவறும் கிடையாது என பதில் அளித்துள்ளார். ரம்யா ஜோவுக்கு சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் நல்ல வாய்ப்புகள் அமைய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











