என் மனைவி கிட்ட என்ன பேச்சு.. ஆடியோவை லீக் செய்யவா? அதிரவிட்ட ரவீந்தர்.. மிரண்டு போன நடிகர்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10வது வாரத்தை தாண்டி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷனில் ஆர்.ஜே.ஆனந்தியும் சாச்சனாவும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று சத்யா, தர்ஷிகா இருவரும் எவிக்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் ரவீந்தருக்கும் விஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் வீட்டில் இருந்த ஒருவாரத்திலேயே ஸ்டேடர்ஜியுடன் விளையாடி, பிரேக் செய்து விளையாட்டை சுவாரசியமாக்கினார். ஆனால், முதல் வாரத்திலேயே எவிக்டாகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது அவர் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை ரிவ்யூ செய்து வருகிறார்.

Bigg Boss Ravinder vishnu

ரவீந்திரன்: இதில் அவர் செய்த ரிவ்யூவில் முத்துக்குமரன் தான் வெற்றிப்பெறுவார் என்றும் செளந்தர்யாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளார். இதைப்பார்த்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான விஷ்ணுவுக்கும் ரவீந்தருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த விஷ்ணு, ரவீந்தரின் மனைவி மகாலட்சுமிக்கு போன் செய்து, ரவீந்தர் இப்படி தொடர்ச்சியாக பேசி வருவது சரியில்லை என்றும், தவறு என்றும் பேசி இருக்கிறார். இதை ரவீந்தரிடம் மகாலட்சுமி கூறியிருக்கிறார்.

Bigg Boss Ravinder vishnu

ஆடியோவை லீக் பண்ணவா: இதைத்தொடர்ந்து, ரவீந்தர் ரிவ்யூவின் போது வழக்கம் போல் முத்துக்குமரனுக்கு ஆதரவாக அவர் பேச விஷ்ணு கடுப்பாகி உள்ளார். அதற்கு ரவீந்தர் நீ, செளந்தர்யாவுக்கு பிஆர்ஓ வேலை செய்து கொண்டு இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நீ சௌந்தர்யாவிற்கு சொம்பு தூக்குவதால், நானும் அப்படி செய்ய வேண்டுமா, நான் முத்துகுமரனுக்கு பிஆர்ஓ வேலை செய்யவில்லை. முத்துக்குமரன், பிக் பாஸ் வீட்டில், உண்மையாக, விளையாட்டை புரிந்து விளையாடி வருகிறார். அதனால் தான் அவர் ஜெயிக்க, அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.

ஆனால், நீ என்னுடைய மனைவிக்கு போன் பண்ணி, ரவீந்தர் அப்படி பேசுவது தப்பு என்று சொல்லி இருக்க, நீ என்னை மிரட்டுறியா...நீ பேசுன ஆடியோ என்னிடம் இருக்கிறது, அதை நான் லீக் செய்யவா என்று மிரட்டி இருக்கிறார் ரவீந்தர். பலர் முன்னிலையில் ரவீந்தர், விஷ்ணு சண்டைப்போட்டது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X