Bigg Boss 3 Tamil : பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நடந்த அதிசயம்

By Siva

சென்னை: பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அதிசயம் நடந்துள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வனிதா விஜயகுமாரை வெளியேற்றிய பிறகு பார்வையாளர்கள் கொந்தளித்துவிட்டனர். வனிதா அக்கா இல்லாமல் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கப் போவது இல்லை என்று பலரும் தெரிவித்தார்கள்.

கவின், லாஸ்லியா, சாக்ஷி இடையேயான முக்கோண காதல் கதையை காட்டி பிக் பாஸ் கடுப்பேற்றியபோது எல்லாம் எங்க வனிதா அக்கா இருந்தால் இந்த காதலுக்கு ஒரு முடிவு கட்டியிருப்பாரே என்றார்கள் பார்வையாளர்கள்.

வனிதா

வனிதா

வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரை பஜாரி அது, இது என்று பார்வையாளர்கள் கேவலமாக திட்டினார்கள். ஆனால் அவர் கிளம்பிய பிறகு அவர் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக உள்ளது, பார்க்கவே முடியவில்லை என்று புலம்பினார்கள். பிக் பாஸ், தயவு செய்து எங்க வனிதா அக்காவை மீண்டும் அழைத்து வாருங்கள், வேறு எதுவுமே கேட்க மாட்டோம் என்று பார்வையாளர்கள் கெஞ்சினார்கள்.

பிக் பாஸ் 3

பிக் பாஸ் 3

பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை நடக்கும்போது எல்லாம் அய்யோ, எங்க வனிதா அக்கா இருந்தால் இந்த காமெடி பீசுகள் எல்லாம் பிரச்சனை செய்யுமா என்று பார்வையாளர்கள் புலம்பினார்கள். இந்நிலையில் தான் பிக் பாஸ், பார்வையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்வது என்று முடிவு எடுத்து வனிதாவை விருந்தாளியாக அழைத்து வந்துள்ளார்.

சாக்ஷி

சாக்ஷி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் 2வது சீசன்களில் எந்த ஒரு போட்டியாளரும் வெளியே சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி வந்தது இல்லை. வனிதாவுக்காக இல்லை பார்வையாளர்களுக்காக பிக் பாஸ் விதிகளை மாற்றிவிட்டார். வனிதா வந்ததை பார்த்த பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்ன மீரா, சாக்ஷி இருந்திருந்தால் அக்கா ஒரு கை பார்த்திருப்பார், 2 பேரும் தப்பித்துவிட்டார்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

இதற்கு முன்பும் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துள்ளார்கள். ஆனால் அந்த சீசனில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் உடனே விருந்தாளியாக வந்து தங்கியது இல்லை. வனிதா அக்காவை எங்களுக்காக அல்ல டி.ஆர்.பி.க்காகவும் தான் பிக் பாஸ் அழைத்து வந்துள்ளார். கருப்பன் குசும்புக்காரன் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X