லுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil
Recommended Video

சென்னை:பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களின் உடைகள் வராததால் கடுப்பில் உள்ளனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று துவங்கியுள்ளது. சும்மா 2 நாட்களுக்கு எங்காவது சென்றாலே 2 பெரிய பெட்டி நிறைய துணி எடுத்துச் செல்லும் மும்தாஜை இரண்டு சின்ன பெட்டியில் உடைகளை எடுத்து வரவைத்துள்ளனர்.
இந்நிலையில் 2 ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
உடை
தங்களின் உடைகள் வரவில்லை என்று மும்தாஜ் உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக் பாஸிடம் புகார் கூறுகிறார்கள். சென்றாயனோ லுங்கி அன்ட்ராயர் எல்லாம் நோ ப்ளீஸ் ஹெல்ப் மீ என்று ப்ரொமோ வீடியோவில் கெஞ்சுகிறார். அவர்களை எல்லாம் பார்த்து ஓவியா சிரிக்கிறார்.
சண்டை
படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 3 கவர்களை கண்டுபிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஆண்கள் யாரும் பெண்களின் உடைகளை தொடக் கூடாது என்று மும்தாஜ் கறாராக கூறும் மற்றொரு ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

சென்றாயன்
2வது ப்ரொமோ வீடியோவை பார்த்தால் சென்றாயனுக்கும், மும்தாஜுக்கும் இடையே பிரச்சனை வரும் போன்று உள்ளது. ஆனால் இந்த ப்ரொமோவில் காட்டுவது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அல்லவா இருக்கும்.

கூட்டணி
மமதி சாரியும், மும்தாஜும் கூட்டணி சேர்ந்துவிட்டார்கள் போன்று. தன்னை கார்னர் செய்வார்களோ என்ற பயத்திலேயே உள்ள ரித்விகா விட்டால் அழுதுவிடுவார் போல.


Click it and Unblock the Notifications











