பின் தொடர்ந்த மர்ம ஆசாமி.. பதறிப்போன பிக்பாஸ் பிரபலம்.. வீடியோ ஆதாரத்துடன் புகார் !

சென்னை : நடைபயிற்சிக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வந்ததாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவரும் பிரபல தொகுப்பாளருமான வைஷ்ணவி புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார் வைஷ்ணவி. இவர் ரேடியோ தொகுப்பாளராகவும் உள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல்வேறு சமூக கருத்துகளை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

ஆர் ஜே வைஷ்ணவி

ஆர் ஜே வைஷ்ணவி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான ஆர் ஜே வைஷ்ணவி, மர்ம ஆசாமி ஒருவர் தன்னை பின் தொடர்ந்து தொந்தரவு செய்ததை வீடியோ ஆதாரங்களுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தன் வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சிக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும், நான் எங்கு சென்றாலும் அந்த நபர் என்னை பாலோ செய்தார். இதனால் நான் பதற்றம் அடைந்தேன்.

பின்தொடர்ந்த மர்ம ஆசாமி

பின்தொடர்ந்த மர்ம ஆசாமி

மேலும், அந்த ஆசாமிக்கு தனது வீடு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கிட்டத்தட்ட நிமிடங்களுக்கு மேல் சாலையிலேயே அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தேன் என தெரிவித்துள்ளார். அந்த மர்ம என்னை மிரட்டும் விதமாக பின்தொடர்ந்து வந்ததாகவும் அதன்பின் அந்த வாலிபருக்கு தெரியாமல் வீட்டிற்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேறு ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது

இதனால், நான் தொலைபேசியில் பேசுவது போல் அந்த மர்ம நபரை வீடியோ பதிவு செய்ததாக ஆர்.ஜே வைஷ்ணவி கூறியுள்ளார். இது குறித்து எனது அம்மாவிடம் கூறிய போது, மர்ம ஆசாமி குறித்து போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என்றார். நீ புகார் கொடுத்தால் அந்த நபர் பழிவாங்கக்கூடும் என அம்மா தடுத்ததாகவும். ஆனால், புகார் அளித்தால்தான் இதுபோன்று வேறு ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் புகார் அளிப்பதாகவும் வைஷ்ணவி கூறியுள்ளார். வீடியோ ஆதாரத்துடன் இந்த புகாரை சென்னை காவல்துறை டிவிட்டர் பக்கத்திலும் டேக் செய்துள்ளார்.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

வைஷ்ணவி தைரியமாக மர்ம நபர் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு புகார் அளித்ததற்கு காவல்துறை தரப்பில் இருந்தும் சமூக வலைதளம் மூலம் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்று நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் உதவி என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதிலளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X