மீண்டும் நாமினேட் செய்யப்படும் ஐஸ்வர்யா: ஓட்டு போடுவீங்களா மக்களே?
சென்னை: இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவை பார்ப்பவர்கள் மறுபடியும் முதலில் இருந்தா பிக் பாஸ், இப்பவே கண்ணை கட்டுதே என்கிறார்கள்.
ஐஸ்வர்யாவை பித்தலாட்டம் செய்து காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ். நியாயப்படி ஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கமல் ஹாஸன் தெரிவித்தார்.
கமல் பேச்சுக்கு சுத்தமாக மதிப்பு இல்லை என்பது ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதில் இருந்தே தெரிந்தது. ஆனால் கமல் பார்வையாளர்களை குற்றம் சாட்டியது நியாயம் இல்லை.

ஐஸ்வர்யா
இந்த வாரம் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்ய வேண்டும் என்று கமல் ஹாஸன் கோரிக்கை விடுத்தார். இது ஐஸ்வர்யா மீதான காழ்ப்பு இல்லை அநீதிக்கான கோபம் என்றார். ஐஸ்வர்யா இடத்தில் வேறு யாராவது இருந்து இத்தனை தவறுகள் செய்திருந்தாலும் நான் இதே பரிந்துரையை தான் வைத்திருப்பேன் என்றார் அவர். சென்றாயனே செய்திருந்தாலும் இதை தான் சொல்லியிருப்பேன். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்று கமல் கூறினார்.

கமல்
கமல் சார், ஐஸ்வர்யாவை நீங்கள் நாமினேட் செய்ய பரிந்துரை செய்ததை கூட முழுமனதாக நம்ப முடியவில்லை. இதுவும் பிக் பாஸ் கொடுத்த ஸ்க்ரிப்ட்டாக இருக்குமோ. ஐஸ்வர்யாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என்று மீண்டும் ஒரு பொய் நாடகத்தை அரங்கேற்றி அவருக்கு டைட்டிலை கொடுக்க போட்டுள்ள புது திட்டமோ என்ற யோசிக்கத் தோன்றுகிறது.
பரிந்துரை
ஐஸ்வர்யாவை இந்த வாரம் நாமினேட் செய்ய வேண்டும் என்று கமல் கூறியது குறித்து பிக் பாஸ் போட்டியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஐஸ்வர்யாவுக்கு இந்த வாரம் நாமினேட் ஆக இஷ்டம் இல்லை. ஐஸ்வர்யாவை பார்த்தால் பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல சக போட்டியாளர்களுக்கும் கூட பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.
ஓட்டு
இந்த வாரமும் நாமினேட் செய்து கள்ள ஓட்டு போட்டு மக்களின் செல்வாக்கு ஐஸ்வர்யாவுக்கே என்று கூறி மீண்டும் அவரை காப்பாற்றிவிடுவார்கள். இது தான் அவர்களின் திட்டம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











