BB9: அரோரா மாதிரி என் மகளை வளர்ப்பேன்.. 3வது ரன்னர் அப்பாக எவிக்ட்.. சபரிநாதன் எமோஷனல்!
சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் யார் எவிக்ட் ஆனார்கள். யாரு டைட்டில் வின்னர் என்கிற தகவல் எல்லாம் முன்பே கசிந்தாலும், அதை நேரடியாக நிகழ்ச்சியை பார்க்கும் போதுதான் சுவாரஸ்யம் அதிகரிக்கும். விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரை இந்த சீசனில் அதிக நேரம் பார்க்காத நபர்கள் கூட கிராண்ட் ஃபினாலேவை பார்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு சபரிநாதன், அரோரா, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் திவ்யா கணேஷ் உள்ளிட்ட 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டியாளராக உள்ளே இருந்த நிலையில், 3வது ரன்னர் அப்பாக அரோரா சின்க்ளேர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார்.

இந்த சீசன் டைட்டிலை அவர் தட்டித் தூக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4வது நபராக அவர் வெளியேறியது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
எவிக்ட் ஆன பலூன் அக்கா: முதல் வாரமே தாக்குப் பிடிப்பேனா என தெரியாமல் இருந்தேன். ஆரம்பத்தில் ரொம்பவே சேஃப் கேம் ஆடிக் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் தான் என்மீதே எனக்கு நம்பிக்கை வந்து விளையாட ஆரம்பித்தேன் என எவிக்ட் ஆன நிலையில், அரோரா பேசியதை கேட்ட ரசிகர்கள், துஷார் வெளியே போன பின்னர் தான் உஷாராக விளையாட ஆரம்பித்தார் பலூன் அக்கா என கலாய்த்து வருகின்றனர்.
அரோரா மாதிரி பெண் குழந்தை: பலூன் அக்கா என ரசிகர்கள் கொண்டாடிய அரோரா சின்க்ளேர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில், பலரும் இந்த நிகழ்ச்சியை ஆபாசமாக ட்ரோல் செய்தனர். ஆனால், அந்த பெயரை மாற்ற வேண்டும் என அரோரா போராடியதற்கு பலன் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அரோரா மாதிரி பெண் குழந்தை எல்லாம் வேண்டும் என யாருமே சொல்ல முன் வரமாட்டார்கள். ஆனால், சபரிநாதன் தனக்கு பெண் குழந்தை பிறந்தால் அதை அரோரா போல நல்ல குணம் கொண்ட பெண்ணாக வளர்ப்பேன் எனக் கூறியுள்ளார். அரோராவை முதல் நாள் எப்படி குழந்தையாக பார்த்தேனோ அதோ போலத்தான் இப்பவும் பார்க்கிறேன் எனக் கூறிய சபரிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











