வில்லன் பொன்னம்பலம்... மனைவியுடன் தாடி பாலாஜி... ஓவியா இல்லை- 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு

இன்னும் சற்று நேரத்தில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கவுள்ளது.

By Lakshmi Priya

Recommended Video

பிக் பாசில் ஹவுஸ் மேட்ஸ் யார் யார் என்னென்னென்ன பண்ராங்க!?

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வில்லன் பொன்னம்பலம், நடிகர் தாடி பாலாஜி, தாடி பாலாஜியின் மனைவி என 16 பேருடன் களை கட்டியிருக்கிறது வீடு.

பிக்பாஸ் வீட்டுக்கு 17-ஆவது போட்டியாளராக நடிகை ஓவியாவை அறிமுகம் செய்து வைத்தார் கமல். ரசிகர்களும் ஆராவாரம் செய்தனர். ஆனால் பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் போட்டியாளரைப் போல உள்ளே சென்று எதையெல்லாம் செய்யக் கூடாது என டிப்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு வாங்க என கமல்ஹாசன் கூறினார். அதை ஆமோதித்தபடியே போட்டியாளர் போல பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார் ஓவியா. ஓவியாவும் பிக்பாஸ் 2-ல் இருப்பதாக நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பிக்பாஸ் வீட்டுக்கு 16-ஆவது போட்டியாளராக வந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்துள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர்.

 Bigg boss Season 2 is going to be started after 30 minutes

பிக்பாஸ் வீட்டுக்கு 15-ஆவது போட்டியாளராக வந்தார் ஷாரிக் ஹாசன். இவர் கமலா காமேஷின் பேரன், ரியாஸ் கான்- உமா தம்பதியின் மகனாவார்.

பிக்பாஸ் 14-ஆவது போட்டியாளர் நித்யா. இவர் பெண்கள் மேம்பாட்டுக்கான அமைப்பை நடத்தி வருகிறார். இவர் தாடி பாலாஜியின் மனைவி. தாடி பாலாஜி குறித்து காவல் துறையில் புகார் குறித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் 12-ஆவது போட்டியாளராக தாடி பாலாஜியும் உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் 13-ஆவது போட்டியாளர் மமதி. இவர் விஜேவாக இருந்தார். வாணி ராணி தொடரில் வில்லியாக நடித்தார். மிக அழகான குரலுக்கு சொந்தக்காரர். பாடல்கள் பாடுவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 12-ஆவது போட்டியாளர் தாடி பாலாஜி. இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் 3 நடுவர்களில் ஒருவர் இவர். இவருக்கு நித்யா என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர். தன்னையும், தனது மகளையும் தாடி பாலாஜி உயிருடன் எரிக்க பார்த்தார் என புகார் கூறினார் நித்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 11-ஆவது போட்டியாளர் மும்தாஜ். இவரை டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தினார். இவரது முதல் படம் மோனிஷா என் மோனாலிசா. தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்தவர்.

பிக்பாஸில் 10-ஆவது போட்டியாளர் ரித்விகா. இவர் மெட்ராஸ் படத்தில் நடித்தவர். கபாலியில் ரஜினியை அப்பா அப்பா என்று அழைப்பார்.

பிக்பாஸ் சீசன் 2-வில் 9-ஆவது போட்டியாளர் சென்றாயன். இவர் வில்லன், காமெடி ரோலில் நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் பைக் திருடும் ரோலில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசனில் 8-ஆவது போட்டியாளர் ரம்யா. இவர் பாடகியாவார். பழம்பெரும் நடிகரும் நகைச்சுவை மன்னருமான என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோரது பேத்தியாவார்.

பிக்பாஸ் சீசனில் 7-ஆவது போட்டியாளர் ஆனந்த் வைத்தியநாதன். கர்நாடக இசை பாடகர். இவர் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார்.

பிக்பாஸ் சீசனில் 6-ஆவது போட்டியாளர் ஜனனி ஐயர். சென்னையை சேர்ந்தவர். கோபாலபுரம் டிஏவியில் படித்தார். சவீதா பொறியியல் கல்லூரியில் என்ஜீனியரிங் படித்தார். இவர் அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசனில் 5-ஆவது போட்டியாளர் வைஷ்ணவி. இவர் எழுத்தாளர் சாவியின் பேத்தியாவார். ரேடியோ ஜாக்கியாக உள்ளார்.

பிக்பாஸ் சீசனில் 4-ஆவது போட்டியாளர் டேனி. இவர் பிரெண்ட் லவ் மேட்டர் என்ற வசனம் மூலம் புகழ்பெற்றார். காமெடியனாக அறிமுகமான இவர் பல்வேறு வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் இதற்குதான் ஆசைப்பட்டாய் படத்தில் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 2-வில் 3-வது போட்டியாளர் மகத். இவர் அஜித்வுடன் மங்காத்தா படத்தில் நடித்தவர். ஜில்லா படத்தில் விஜயின் தம்பியாக நடித்தவர்.

பிக்பாஸ் சீசன் 2-வில் அடுத்த போட்டியாளர் பொன்னம்பலம் ஆவார். இவர் தவசி, நாட்டாமை உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர். இவரை கபாலி என்றும் அழைப்பர். வில்லத்தனத்திலும் சிறு காமெடியை செய்தவரும் இவர் தான். நாட்டாமையில் இவர் பேசிய ஏய் தாய் கிழவி என்ற வசனம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக யாஷிகா ஆனந்த் அறிமுகம் செய்யப்பட்டார். 18 வயது நிரம்பிய போட்டியாளர், சக போட்டியாளர்களை விட இளம் வயது போட்டியாளர் இவர்தான். துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்தவர்.

பிக்பாஸ் எனும் பொழுது போக்கு நிகழ்ச்சி கடந்த ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 14 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அவர்கள் அடுத்த 100 நாட்களுக்கு வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும். இடை இடையே பிக்பாஸ் நடத்தும் போட்டிகளும் இருக்கும்.

சக போட்டியாளர்களை வென்று கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பவரே வெற்றியாளர். இந்த நிகழ்ச்சி சீசன் 1 முடிந்து இன்று சீசன் 2 தொடங்கியது.

இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து கமல் அறிமுகம் செய்து வருகிறார்.

சீசன் 1-இல் கலந்து கொண்ட ஓவியா இந்த சீசனிலும் கலந்து கொள்கிறார். சீசன் 1 நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா மிகவும் பிரபலமானார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X