பிக்பாஸ் சீசன் 5… தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் புகைப்படம் !

சென்னை : பிக்பாஸ் சீசன் 5-ல் இந்த முறை யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளவர்கள் என எதிர்பார்க்கப்படும் ஒரு சில நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோஸ் வெளியாகியுள்ளது.

இவர்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வழக்கம்போல கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 16 போட்டியாளர்களைக் களமிறக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. எப்போதுமே டிஆர்பியில் போட்டியின்றி டாப் இடத்தைப் பிடிக்கும் இந்த ரியாலிட்டி ஷோ, இம்முறை சர்வைவர், ஐபிஎல், மாஸ்டர் செஃப் உள்ளிட்ட ஏராளமான போட்டி நிகழ்ச்சிகளோடு போட்டியிட உள்ளது.

16 இறுதி போட்டியாளர்கள்

16 இறுதி போட்டியாளர்கள்

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இம்முறை யாரெல்லாம் போட்டியாளர்கள் என்கிற விவாதங்களும் மறுபக்கம் அனல் பறக்க நடந்துகொண்டுதான் இருக்கிறது. இம்முறை போட்டிப் போடும் நிகழ்ச்சிகளும் அதிகம் என்பதால், போட்டியாளர்களை அதிக கவனத்துடன் தேர்வு செய்திருக்கிறது விஜய் டிவி. ஆம், தற்போது வரை 20 போட்டியாளர்களின் பெயர்கள் உள்ளதாம். அதிலிருந்து 16 இறுதி போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்கள்

இதனிடையே பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளவர்கள் என எதிர்பார்க்கப்படும் ஒரு சில நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோஸ் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி உள்ளிட்டோர் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது ஒரு வாரம் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷகீலாவின் மகள் மிலா

ஷகீலாவின் மகள் மிலா

குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு கலக்கிய நடிகை ஷகீலா பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மகள் மிலா இந்த சீசனில் கலந்து கொள்வது இந்த புகைப்படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு வரும் சனிக்கிழமை பூந்தமல்லியில் உள்ள ஈவிபியில் நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X