twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாட்டுப்பாடி அமுதவாணனுக்கு சோறூட்டும் சாந்தி..இதுவும் டாஸ்க்காம்.. என்ன கொடுமை சார் இது!

    |

    சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் அடுத்த அர்ச்சனாவாக மெட்லி சாந்தி மாறி அமுதவாணனுக்கு பாட்டுப்பாடி சோறு ஊட்டி உள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்போடு ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் தினமும்இ இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

    அதே போல டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் அதில் சென்று லைவாக நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள்.

    நீ ஒன்னும் பிக் பாஸ் இல்ல..நான் என்ன சாப்பிடணும்னு நீ சொல்லாதே.. மகேஷ்வரியில் எகுறிய அசிம்!நீ ஒன்னும் பிக் பாஸ் இல்ல..நான் என்ன சாப்பிடணும்னு நீ சொல்லாதே.. மகேஷ்வரியில் எகுறிய அசிம்!

    மெட்டி ஒலி சாந்தி

    மெட்டி ஒலி சாந்தி

    பிக்பாஸ் வீட்டின் தாயாக அவதாரமெடுக்கும் மெட்டி ஒலி சாந்தி. ஒவ்வொரு சீசனிலும் சமையல் செய்வது பொறுப்பாக தங்கள் வீட்டை வழி நடத்துவதில் பெண்கள் முன் வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும் பெண்களே தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்துவது சிறப்பான ஒன்று. அர்ச்சனா, வனிதா, தாமரை வரிசையில் இந்த முறை சாந்தி அந்த இடத்தை பூர்த்தி செய்து வருகிறார்.

    பெண்கள் தைரியமாக இருக்கணும்

    பெண்கள் தைரியமாக இருக்கணும்

    சீனியர் என்பதால் அக்கா அக்கா என அனைவரும் அன்புடன் அவரை அழைக்கின்றனர். அதே நேரம் அமுதவாணன் போன்றோர் கிண்டலடித்தாலும் ஜாலியாக எடுத்துக்கொண்டு வழிநடத்துகிறார் சாந்தி. நேற்று கேமரா முன் பெண்கள் தைரியமாக இருக்கணும், தனித்துவத்துடன் இருக்கணும் என்று பெண்களுக்கு புத்தி மதியும் சொன்னார். அதே நேரம் தனித்துவம் என்பது நம் மன தைரியம், அது உறவுகளை முறிப்பதுபோன்ற நடவடிக்கை என பொருள்படும்படி விளக்கம் கொடுத்தார்.

    அம்மாவாக மாறிய சாந்தி

    அம்மாவாக மாறிய சாந்தி

    பிக் பாஸ் வீட்டில் இன்று முதல் டாஸ்க் தொடங்கி உள்ளது. இதில் கிச்சன் டீமின் கேப்டனாக ஷிவின் இருக்கிறார். இதில் கிச்சன் டீமில் இருப்பவர்கள் ஹவுஸ் மேட்ஸ் கேட்டால் உணவை ஊட்டி விட வேண்டும் என பிக் பாஸ் ஆர்டர் போட்டுள்ளார். இதனால்,அமுதவாணன் சாந்தியிடம் எனக்கு உணவு ஊட்டி விடவேண்டும் என அடம்பிடிக்கிறார். இதையடுத்து, சாந்தியும் அம்மாவை போல புடவை கட்டிக்கொண்டு, கற்பூர பொம்மை ஒன்று பாடலை பாடி அழுதவாணனுக்கு உணவு ஊட்டி விட்டார்.

    வலுவான போட்டியாளர்

    வலுவான போட்டியாளர்

    அதே நேரத்தில்,அசிம் டீ கேட்டு சண்டை போட்டபோதும், உங்களுக்கு டீ தானே வேணும் நான் போட்டு தருகிறேன் அமைதியா இருக்க என்று அவரை சமாதானப்படுத்தினார். அனைவருக்கும் பிடித்ததை அனைவர்களின் கருத்தைக் கேட்டு செய்கிறார் சாந்தி. இதனால், இந்த சீசனின் வலுவான போட்டியாளராக இருப்பார் என தெரிகிறது.

    English summary
    Bigg Boss season 6 tamil day 2 : Metti oli shanthi who fed Amudhavanan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X